தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

17 Aug 2026, 9:18 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

பீகார் கோவிலில் கூட்ட நெரிசல்: 7 பேர் பலி

பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ளது அசோக் தாம் கோவில். இங்கு சவான் மாதத்தின் மூன்றாவது திங்கள்கிழமையை ஒட்டி சிறப்பு பூஜைநடைபெற்றது. காலை 6.30 முதல் 6.45மணிக்குள் இரண்டு ரயில்களில் பொதுமக்கள் பெருமளவில் வந்ததால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. அப்போது திடீரென மின்கம்பம் ஒன்று சாய்ந்ததால், மின்சாரக் கம்பி விழுந்ததாகப்பரவிய வதந்தியால் பெண்கள் வரிசையில் பீதியும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டு 7 பேர் இறந்துள்ளனர். பலர்காயமடைந்தனர்.

மேற்கு வங்கத்தில் தீ விபத்து : 6 பேர் பலி

பாஜக ஆளும் மேற்குவங்க மாநிலம், பிர்பூம்மாவட்டத்தில் உள்ளது தாராபீத் கோவில். இந்த கோவில் அருகே உள்ள ஒரு விடுதியில் திங்களன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விடுதியில் தங்கியிருந்த பெரும்பாலானவிருந்தினர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, நான்கு மாடிகளைக் கொண்ட இந்த விடுதியின் தரைதளத்தில் அதிகாலை 4:30 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

யுஜிசி நெட் தேர்வு3 பாடங்களுக்கு மறுதேர்வு தேதி அறிவிப்பு

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற யுஜிசி நெட் (UGC NET)தேர்வின் உத்தேச விடைக்குறிப்பு கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 87 பாடங்களுக்கு தேர்வு நடைபெற்ற நிலையில், 84 பாடங்களுக்கு மட்டும் உத்தேச விடைக்குறிப்பு வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வில், ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சோஷியாலஜி பாடங்களில் குளறுபடிகள் என்ற குற்றம்சாட்டும் முன்வைக்கப்பட்ட நிலையில், அந்த பாடங்களின் உத்தேச விடைக்குறிப்புவெளியிடப்படவில்லை.

இந்நிலையில், தேசிய தேர்வு முகமை ஆங்கிலம், வணிகவியல், சோஷியாலஜி பிரிவுகளில் மறுதேர்வு நடத்தப்படும்என்றும், அதற்கான தேர்வு தேதியை திங்களன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டஅறிக்கையில்,“பல்கலை உதவிப் பேராசிரியர் தகுதி மற்றும் ஆராய்ச்சிஉதவித்தொகைக்கான யுஜிசி நெட் தேர்வுகள், கடந்த ஜூன் மாதம் 22ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெற்றது.

மொத்தம் 87 பாடங்களுக்கு நடத்தப்பட்டஇந்தத் தேர்வில், ஆங்கிலம், வணிகவியல்மற்றும் சோஷியாலஜி பாடங்களில், தவறான மொழிப்பெயர்ப்பு, எழுத்துப் பிழைகள், ஒரே கேள்வி மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டிருப்பது போன்ற குளறுபடிகள் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சோஷியாலஜி பாடங்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தப்பட இருக்கிறது. செப்டம்பர் 9ஆம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரையில் ஆங்கிலமும், அதே நாளில் மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரையில் வணிகவியல் தேர்வும் நடைபெற இருக்கிறது. அதேபோல, செப்டம்பர் 10ஆம் தேதி சோஷியாலஜி தேர்வும் நடைபெற இருக்கிறது. தேர்வு மையம்மற்றும் ஹால் டிக்கெட் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்வெளியிடப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.