தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பீகாரில் பள்ளிகளுக்கு காவி வண்ணம் பாஜக கூட்டணி கட்சி கடும் எதிர்ப்பு

20 Jul 2026, 9:43 pm
பீகாரில் பள்ளிகளுக்கு காவி வண்ணம் பாஜக கூட்டணி கட்சி கடும் எதிர்ப்பு
<p><strong>பீகாரில் பள்ளிகளுக்கு காவி வண்ணம் பாஜக கூட்டணி கட்சி கடும் எதிர்ப்பு</strong></p><p>பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில், மாநிலம் முழுவதும் உள்ள 551 அரசு மாதிரிப் பள்ளிகளின் பெயரை ‘சரஸ்வதி வித்யா நிகேதன்’ என்று சமீபத்தில் மாற்றியதோடு, அந்தப் பள்ளிகள் அனைத்திற்கும் காவி வண்ணம் பூசுமாறு பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐக்கிய ஜனதாதளம் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “கல்வியில் எந்தவிதமான நிற அடையாளத்தையும் புகுத்துவதை நாங்கள் ஏற்க மாட்டோம். பள்ளிகள் அரசியல் அடையாளங்களை விட அரசியல மைப்பு விழுமியங்களையே பிரதிபலிக்க வேண்டும். புதிய பள்ளிகளின் பெயர் பலகைக ளுக்குக் கீழே நிலம் வழங்கியவர்களின் பெயர்களை வைக்கும் முடிவையும் எப்படி ஏற்பது?” என அவர் கேள்வி எழுப்பினார். அதே போல எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி,”பள்ளிகளின் பெயர் மாற்றம் மற்றும் காவி வண்ணம்பூசும் உத்தரவு மூலம், ஆர்எஸ்எஸ் கல்வித் திட்டத்தை பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முன்னெடுத்து வருகிறது. கல்வி அமைப்பிற்கு அரசியல் நிறத்தை அளிக்கும் நோக்கத்தில் இந்த நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக விழுமியங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்”என எச்சரிக்கை விடுத்துள்ளது. </p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.