தலைவர்களை விடுதலை செய்யக்கோரி பீகாரில் மக்கள் பேரணி
8 Jul 2026, 8:32 pm
<p><strong>தலைவர்களை விடுதலை செய்யக்கோரி பீகாரில் மக்கள் பேரணி</strong></p><p>ஜூன் 18 அன்று பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் அரசு கல்லூரி அமைக்கக் கோரி சிபிஐ(எம்), இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். அதில் 39 தலைவர்களை காவல்துறை கொடூரமாக தாக்கி கைது செய்தது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஜூலை 7 செய்வாய்க்கிழமையன்று மாபெரும் பேரணியை நடத்தினர். இந்த மக்கள் பேரணியில் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அம்ரா ராம், பீகார் மாநிலச் செயலாளர் லல்லன் சௌத்ரி, இந்திய மாணவர் சங்க பொதுச்செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.</p>
