பீகாரில் மதிய உணவில் சோப்புத் தூள் 34 குழந்தைகள்மருத்துவமனையில் அனுமதி
19 Aug 2026, 8:25 pm

பீகாரில் மதிய உணவில் சோப்புத் தூள் 34 குழந்தைகள்மருத்துவமனையில் அனுமதி

பீகாரின் நாளந்தா மாவட்டத்தில் உப்புக்கு பதிலாக சோப்புத் தூள்(detergent powder) கலக்கப்பட்ட மதிய உணவை உண்ட 34 குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் மதிய உணவு வழங்கும் பொறுப்பு தனியார் தொண்டு நிறுவனங்களுக்குஒதுக்கப்பட்டுள்ளது.அப்படி ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தால் தான் இந்த மதிய உணவும் வழங்கப்பட்டுள்ளது. நாளந்தாவில் உள்ள பர்சா நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மதிய உணவருந்திய பின் தொண்டை எரிச்சல்மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளனர். உடனடியாக அவர்கள் பீகார் ஷெரீப்பில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

செல்லும் வழியிலேயே சில குழந்தைகள் வாந்தி எடுத்து வலி தாங்க முடியாமல் கீழே விழுந்ததையும் பார்த்ததாக ஒரு குழந்தையின் தந்தை கூறியுள்ளார். பள்ளி ஊழியர்கள் உணவு பரிமாறிய போது சில குழந்தைகள் உப்பு கேட்டதாகவும்,அப்போது உப்புக்கு பதிலாக சோப்புத் தூளைப் தவறுதலாக ஊழியர்கள் கொடுத்து விட்டதாகவும் பள்ளியின் தலைமை ஆசிரியர்சைலேந்திர குமார் சிங் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த பிரச்சனை குறித்துவிரிவான விசாரணை நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.