பீகார் மருத்துவமனையில் தீ விபத்து 5 பேர் பலி : பலர் கவலைக்கிடம்
5 Jun 2026, 12:52 am

பீகார் மருத்துவமனையில் தீ விபத்து 5 பேர் பலி : பலர் கவலைக்கிடம்

பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் பிரம்புரா பகுதி யில் உள்ளது பிரசாத் என்ற தனி யார் மருத்துவமனை. இந்த மருத்துவ மனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வியா ழனன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

நோயாளி கள் தூக்கத்தில் இருந்ததால் என்ன நடந்தது என்று தெரியாமல், தீ விபத்தில் சிக்கியுள்ளனர். இந்நிலையில், இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர்.

படுகாயத்துடன் மீட்கப்பட்ட பலர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்த வர்களில் பலரது நிலைமை கவலைக்கிட மாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.

விபத்து குறித்து முசாபர்பூர் மாநகராட்சி ஆணையர் ரிதுராஜ் சிங் கூறு கையில்,“தீ விபத்தில் மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய் யப்பட்டுள்ளது. காயமடைந்த பலருக்குப் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.