“பீகார் தேர்தல் முடிவுகள் சந்தேகத்திற்குரியவை”
7 Dec 2025, 3:52 pm
<p>“பீகார் தேர்தல் முடிவுகள் சந்தேகத்திற்குரியவை”</p>
<p>பீகார் தேர்தல் முடிவுகள் சந்தே கத்திற்குரியது உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் கபில் சிப லுடனான நேர்காணலில் ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவரும், பீகார் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி கூறியுள்ளார். நேர்காணலில் அவர் மேலும் கூறுகை யில்,”பீகாரில் தேர்தல் செயல்முறை நியாயமாக நடைபெறவில்லை. அரசு இயந்திரம் ஆளும் கட்சி கூட்டணி நல னுக்காகப் பயன்படுத்தப் பட்டது. பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்திருக்கலாம். ஆனால் ஜன நாயகமும் பொதுமக்களின் கருத்தும் வெற்றிபெறவில்லை. பீகாரில் வேலை யின்மை முக்கியப் பிரச்சனையாக உள் ளது. மக்கள் அதற்கான பதில்களைக் கோரினர். தொழில்கள் மற்றும் வணிகங்க ளின் பற்றாக்குறை, அடிக்கடி வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பிரச்சனை தீவிரமாக இருந்தது.மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்து இருந்தனர். பெரும் பான்மையான மக்கள் மாற்றத்தை விரும்பினர். நான் தோல்வியை ஏற்றுக்கொண்டா லும், தேர்தல் முடிவுகள் சர்ச்சசைக்குரி யது தான். காரணம் நிறைய தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்குகளால் தோற்க டிக்கப்பட்டுள்ளோம். சில இடங்களில் வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்தது. இதனால் பீகார் தேர்தல் முடிவு கள் சந்தேகத்திற்குரியதாகத் தெரி கிறது. ஆர்ஜேடியின் வாக்கு சதவீதம் அதி கரித்துள்ள நிலையில், இவ்வளவு சிறிய வித்தியாசத்தில் தோல்வியடைவது சாதா ரணமானது அல்ல” என அவர் கூறி னார்.</p>
