முந்தய பக்கம்

கல்வி அமைச்சரா? மனுவாத அமைச்சரா?

15 May 2026, 10:24 pm
கல்வி அமைச்சரா? மனுவாத அமைச்சரா?
<p><strong>கல்வி அமைச்சரா? மனுவாத அமைச்சரா? </strong></p><p>பெண் கல்விக்காகச் சாவித்திரி பாய் பூலே முதல் ஜோதிபா பூலே வரை பல சமூகப் போராளிகள் இரத்தம் சிந்திப் போராடிப் பெற்ற உரிமைகளை, பீகார் பாஜக கல்வி அமைச்சர் மிதிலேஷ் திவாரி ஒற்றை வரியில் கொச்சைப் படுத்தியுள்ளார். &quot;பெண்கள் நான்கு சுவர்களுக்குள் இருந்தால் போதும், அவர்களுக்குக் கல்வி தேவையில்லை&quot; என்ற இவரது பேச்சு, ஆர்.எஸ்.எஸ்-ன் வர்ணாசிரமக் கொள்கை இவர்களது இரத்தத்தில் எவ்வளவு ஆழமாக ஊறியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஏபிவிபி (ABVP) பின்னணியில் இருந்து வந்த ஒரு முன்னாள் ஆசிரியரே இப்படிப் பேசுவதுதான் வேதனையின் உச்சம். கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் பெண் கல்வியால் சமூக மாற்றத்தை எட்டி வரும் சூழலில், ஏற்கனவே பின் தங்கியுள்ள பீகாரைப் படுகுழிக்குத் தள்ளத் துடிக்கிறார் இந்த அமைச்சர். &quot;பெண் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுங்கள்&quot; எனப் பிரதமர் மேடைகளில் முழங்குவது வெறும் நாடகமா? தன் கட்சி அமைச்சரின் இந்தப் பிற்போக்குத்தனமான கருத்தை இதுவரை பாஜக கண்டிக்காதது ஏன்? பெண்களின் உரிமைகளைப் பறிக்கும் இத்தகைய &#39;மனுவாதி&#39; மனநிலை கொண்ட அமைச்சர்களை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.</p>
Share
FacebookXWhatsAppTelegram