முந்தய பக்கம்

சட்டமன்றத்தில் போதைப்பொருள்  பயன்படுத்திய பீகார் துணை முதலமைச்சர்

20 Feb 2026, 2:39 pm
சட்டமன்றத்தில் போதைப்பொருள்  பயன்படுத்திய பீகார் துணை முதலமைச்சர்
<p><strong>சட்டமன்றத்தில் போதைப்பொருள் &nbsp;பயன்படுத்திய பீகார் துணை முதலமைச்சர் </strong></p> <p>பீகார் மாநிலத்தில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) &nbsp;கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் உள்ளார். துணை முத லமைச்சர்களாக சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா உள்ளனர். இருவரும் பாஜக வைச் சேர்ந்தவர்கள் ஆவர். &nbsp;இந்நிலையில், பீகார் மாநிலத்தின் சட்டமன்றத்தில் பாஜக துணை முத லமைச்சர் சாம்ராட் சவுத்ரி போதைப் பொருள் பயன்படுத்தியது பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரின் போது சட்டமன்ற இருக் கையிலேயே சாம்ராட் சவுத்ரி &lsquo;கைனி (கூலிப்)&rsquo; என அழைக்கப்படும் புகை யிலை போதைப் பொருளை கையில் எடுத்து, அதனை ஒரு கையால் மறைத்து வாயில் வைத்துள்ளார். இந்த சம்பவம் சட்டமன்ற தொலைக்காட்சியில் பதிவாகி யுள்ளது. அடுத்த சில நிமிடங்களில் சமூக வலைதளங்களிலும் வெளியாகியுள்ளது. இத்தகைய சூழலில், ஒரு மாநிலத்தின் துணை முதலமைச்சர் சட்டமன்றத்திற் குள்ளேயே போதைப்பொருள் பயன் படுத்துவது பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப் பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜகவின் சட்டமன்ற கண்ணியம் இதுதானா? என கேள்வியும் எழுப்பியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram