பீகார் முதல்வர் நிதிஷின் இழிவான செயல் அரசுப் பணியைப் புறக்கணிக்கும்
17 Dec 2025, 4:11 pm
<p>பீகார் முதல்வர் நிதிஷின் இழிவான செயல் அரசுப் பணியைப் புறக்கணிக்கும் பெண் மருத்துவர் பீகார் முதல்வரின் அநாகரீகமான செயலின் காரணமாக அரசுப் பணியை ஆயுஷ் பெண் மருத்துவர் புறக்கணிக்க உள்ளதாகக் கூறப் பட்டுள்ளது. பாஜக-ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கும் பீகார் மாநிலத்தில் அரசு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு திங்களன்று பாட்னாவில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது ஆயுஷ் மருத்து வர்களில் ஒருவரான நுஸ்ரத் பர்வீன் அவர்களிடம் பணி நியமன ஆணையை வழங்கும் போது அவரது புர்காவை முதல்வர் நிதிஷ் குமார் அநாகரீகமான முறையில் அத்துமீறி இழுத்தார். இந்நிலையில் டிசம்பர் 20-ஆம் தேதி பணியில் சேர வேண்டிய நிலையில், இந்தச் சம்பவத்தால் மனமுடைந்த நுஸ்ரத் பர்வீன் அரசுப் பணியில் சேர வேண்டாம் எனத் தீர்மானித்துள்ளார். இது குறித்து அவரது சகோதரர் (கொல் கத்தாவில் உள்ள அரசு சட்டப் பல் கலைக்கழகப் பேராசிரியர்) ஊடகங்க ளிடம் கூறுகையில்: “அவர் பணியில் சேரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். தவறு செய்தவர் வேறொருவர் தான், அதற்காக நீங்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும் என்று கூறி நாங்கள் அவரைச் சமாதா னப்படுத்த முயன்று வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் நடந்து இரு நாட்க ளுக்கு மேலாகியும், முதல்வர் நிதிஷ் குமாரோ, அவரது கட்சியோ அல்லது பீகார் அரசோ இது குறித்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>
