ஹிஜாபை இழுத்து பெண்ணை அவமதித்த பீகார் முதல்வர் சிறுபான்மை மக்கள் நலக் குழு கண்டன ஆர்ப்பாட்டம்
23 Dec 2025, 4:05 pm
<p><strong>ஹிஜாபை இழுத்து பெண்ணை அவமதித்த பீகார் முதல்வர் சிறுபான்மை மக்கள் நலக் குழு கண்டன ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>கும்பகோணம், டிச.23- அரசு பணி வழங்கும் மேடையில், மருத்துவர் என பாராமல் ஓர் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை இழுத்து அவமதித்த பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை கண்டித்து, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் குழு மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், கும்பகோணம் காந்தி பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, கவிஞர் மு. அயுப்கான் தலைமை வகித்தார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில பொதுச் செயலாளர் பி.செந்தில்குமார், கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் திருவடி குடில் சுவாமிகள், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி, சிபிஎம் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருளரசன், குடந்தை மாநகரச் செயலாளர் செந்தில்குமார், மாதர் சங்க குடந்தை மாநகர தலைவர் சுமதி, தீண்டாமை ஒழிப்பு மாநகரச் செயலாளர் பழ. அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
