தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2ஆம் கட்டத்தில் 67 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் வாக்குப்பதிவு

11 Nov 2025, 3:41 pm
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2ஆம் கட்டத்தில் 67 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் வாக்குப்பதிவு
<p><strong>பீகார் சட்டமன்றத் தேர்தல் 2ஆம் கட்டத்தில் 67 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் வாக்குப்பதிவு</strong></p> <p>பாட்னா 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநி லத்தில் நவம்பர் 6ஆம் &nbsp;தேதி 121 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. 65.08 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. தொடர்ந்து இரண்டாம் கட்ட மாக 122 தொகுதிகளில் செவ் &nbsp;வாய்க்கிழமை அன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. 122 தொகுதி களில் மொத்தம் 1,302 பேர் களத்தில் &nbsp;இருந்தனர். இதில் 136 பேர் பெண் &nbsp;கள் ஆவர். வாக்குப்பதிவு நடை பெறும் 20 மாவட்டங்களில் 3.7 கோடி &nbsp;வாக்காளர்கள் இருந்தனர். இந்நிலையில், செவ்வாய்க் கிழமை காலை 7 மணிக்கு வாக் &nbsp;குப்பதிவு தொடங்கியது. அதி காலை முதலே வாக்குச்சாவடி களில் குவிந்த மக்கள் ஆர்வத்து டன் வாக்களித்தனர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. சில இடங்களில் 4 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. பல தொகுதிகளில் 6 &nbsp;மணிக்கு மேலாக மக்கள் வரிசை யில் நின்றதால் டோக்கன் வழங்கப் &nbsp;பட்டது. மாலை 5 மணி நிலவரப்படி &nbsp;பீகார் இரண்டாம் கட்டத் தேர்தலில் &nbsp;67.14% வாக்குகள் பதிவாகி இருந்தன. 2 கட்டமாக நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் பதி வான வாக்குகள் நவம்பர் 14 ஆம் &nbsp;தேதி எண்ணப்பட உள்ளது என்பது &nbsp;குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.