பீகாரில் போலி சான்றிதழ் சமர்பித்து பணியில் சேர்ந்த 3,000 ஆசிரியர்கள்: விசாரணையில் அம்பலம்!
12 hours before
<p>பீகார் மாநிலத்தில் 3,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போலிச் சான்றிதழ்களை சமர்ப்பித்து பணியில் சேர்ந்திருப்பது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.</p><p>2006 முதல் 2015 வரை நடைபெற்ற ஆசிரியர் பணி நியமனங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, போலிச் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் போலி ஆவணங்களை பயன்படுத்தி ஆயிரக்கணக்கானோர் ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>இந்த விவகாரம் தொடர்பாக போலிச் சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பீகார் மாநில கல்வித்துறை அமைச்சர் மிதிலேஷ் திவாரி தெரிவித்துள்ளார்.</p>
