முந்தய பக்கம்

மிதிவண்டி! - தரகம்பட்டி க.சண்முக சிதம்பரம்

21 Mar 2026, 2:42 pm
மிதிவண்டி! - தரகம்பட்டி க.சண்முக சிதம்பரம்
<p><strong>மிதிவண்டி! - தரகம்பட்டி க.சண்முக சிதம்பரம்</strong></p> <p>நம்மைச் சுமக்கும் மிதிவண்டி நன்மைப் பயக்கும் மிதிவண்டி! செம்மை யாக ஓட்டுதற்குச் சீராய் உதவும் நல்வண்டி! &nbsp;பள்ளம் மேடு யாவிலுமே பயணம் செய்யும் மிதிவண்டி! முள்ளும் கல்லாம் வழிதனிலும் முனைப்பாய்ச் செல்லும் மிதிவண்டி! &nbsp;உருண்டே ஓடும் மிதிவண்டி உடலுக் குறுதி தரும்வண்டி ! உருவில் இதுவோ சிறுவண்டி உலகோர் விரும்பும் உயர்வண்டி! &nbsp;சுழலும் உருளி இரண்டுண்டு சோர்வை நீக்கும் நல்லுந்து! மழலை விரும்பி ஓட்டுகின்ற மகிழ்ச்சி யான மிதியுந்து ! &nbsp;மெல்லச் செல்லும் மிதிவண்டி! மிதிக்க ஓடும் மென்வண்டி ! இல்லம் தோறும் இருக்கின்ற இனிமை யான நல்வண்டி!</p>
Share
FacebookXWhatsAppTelegram