தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பூடான் நாட்டின் பனிப்பாறை ஏரி உடைந்தது மேற்குவங்கம், அசாம் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

30 Oct 2026, 9:22 pm
பூடான் நாட்டின் பனிப்பாறை ஏரி உடைந்தது மேற்குவங்கம், அசாம் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

பூடான் நாட்டின் பனிப்பாறை ஏரி உடைந்தது மேற்குவங்கம், அசாம் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

கொல்கத்தாஇமயமலைச் சாரலில் உள்ள பூடான் நாட்டின் லாயா கெவோக் பகுதியின் வாகிலா மலையடிவாரத்தில்அமைந்துள்ளது ஷின்டாபு ஏரி. பனிப்பாறைகளால் சூழப்பட்ட இந்த ஏரி வியாழக்கிழமைமாலை உடைந்தது. இதனால் பூடானில் இருக்கக்கூடிய ஆறுகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.பூடானின் புனாட்சாங்சு ஆறு இந்தியாவுக்குள் நுழைந்த பிறகு, சங்கோஷ் ஆறு என அழைக்கப்படுகிறது. இதனால் சங்கோஷ் ஆற்றின் கரையோரப் பகுதிகளில்வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையால் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தின் சங்கோஷ் ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே போல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலிபுர்துவார் மாவட்டத்தில் 10,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

வெள்ள நீர் இந்தியாவை நோக்கி கீழ்நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதால், மேற்கு வங்கத்தின் அலிபுர்துவார், ஜல்பைகுரி மாவட்டங்களிலும்,அசாமின் துப்ரி மாவட்டத்திலும் ரெட் அலர்ட் உடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.