போஜ்சாலா - கமால் மசூதி தீர்ப்பு எழுப்பும் கேள்விகள்! - அ.அன்வர் உசேன்
3 Jun 2026, 8:57 pm

போஜ்சாலா - கமால் மசூதி தீர்ப்பு எழுப்பும் கேள்விகள்! - அ.அன்வர் உசேன்

2026 மே மாதம் 15-ஆம் தேதி மத்தி யப் பிரதேச நீதிமன்றம், கமால் மௌலா மசூதி வளாகம் என்பது மசூதி அல்ல எனவும், அது பரமார வம்சத்தைச் சேர்ந்த மன்னர் போஜனால் கட்டப்பட்ட சரஸ்வதி கோவில் எனவும் தீர்ப்பு அளித்தது. அயோத்தி ராமர் கோவில் தீர்ப்புக்குப் பின்னர் காசி ஞானவாபி மசூதி, சம்பல் மசூதி என இப்படிச் சில தீர்ப்புகள் மேலும் மேலும் பெரும்பான்மை மதவாதத்தைச் சார்ந்து வெளிவருகின்றன. இதனூடே 1991 வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டமும் புறக்கணிக்கப்படு கிறது. போஜ்சாலா பிரச்சனையில் தீர்ப்புக்கு அடிப்ப டையாக உள்ள சில மதிப்பீடுகள், தீர்வுக்குப் பதிலாக முக்கிய கேள்விகளை எழுப்புகின்றன. நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்புகள் சமூக ஒற்றுமைக்கு மாறாகப் பிளவுகளை உருவாக்கும் ஆபத்துகளைக் கொண்டுள்ளது என்பது கவலை தரும் அம்சமாகும்.

தீர்ப்பு காணத் தவறும் அம்சங்கள்!

நீதிமன்றத் தீர்ப்பிலும் அதற்கு அடிப்படையாக உள்ள தொல்லியல் துறையின் அறிக்கையிலும், இந்த மசூதிக்கு அடியில் சில முக்கிய இந்து கடவுள் சிலை கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதனால் மசூதிக்கு முன்னர் கோவில் இருந்தது எனவும் கூறப்படுகிறது. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சிலை சரஸ்வதி தேவியினுடையது எனவும் தீர்ப்பு சொல்கிறது. இதற்கு ஆதாரமாகப் பிரிட்டன் அருங்காட்சியகத்தின் இணை யத் தொடர்பு தரப்பட்டுள்ளது. ஆனால், பிரிட்டன் அருங் காட்சியகத்தின் ஆவணங்களில் அந்தச் சிலை சமண மதத்தைச் சார்ந்த யக் ஷினி அம்பா அல்லது அம்பிகா எனும் தேவதை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சிலை குறித்த செப்பேட்டில் வராருசி என்பவர், வாக்தேவி மற்றும் மூன்று சமண தேவதை களின் கலவையான சாயலில் அம்பா சிலை உரு வாக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். வராருசி என்பவர் யார்? சமண மதத்தின் கிளைகளான சந்திர நகரி, வித்யாதாரி ஆகியவற்றின் கோட்பாடு களை நிலைநிறுத்த முயல்பவர் எனவும் தன்னைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தொல்லியல்துறை குறிப்பிடும் சிலை சமண தேவதை என்பது மட்டு மல்ல, அந்தச் சிலையை உருவாக்கியவரும் சமண மதப்பற்றாளர் என்பதும் இந்தச் செப்பேடு தெளிவாகச் சொல்கிறது.

எனினும், இச்சிலை சரஸ்வதி எனத் தொல்லி யல்துறையும் நீதிமன்றமும் சொல்கின்றன. மேலும், மசூதிக்கு அடியில் இருந்த கட்டிடம் ஓர் அரண்மனை என்பதற்கும், அந்தக் காலத்திய அரண்மனை கட்டி டங்களில் கடவுள் சிலைகளும் ஒரு வேலைப்பாடாக இருந்தது என்பதற்கும் சான்றுகள் இருந்தாலும் அவற்றை நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

சமணமும் இந்து மதமும் ஒன்றா?

மேலும், இந்தத் தீர்ப்பின் இறுதியில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகிறது:

“இந்தியாவில் சமணமும் இந்து மதமும் வெவ் வேறானவை அல்ல; ……. பௌத்தமும் சமணமும் இந்து மதத்தின் ஒரு பகுதிதான்!”

எனவே, சமண மதத்தின் அடையாளங்கள் கண்டு பிடிக்கப்பட்டாலும் அவை இந்து மதத்தின் அடையா ளங்கள்தான் எனும் முடிவுக்கு நீதிமன்றம் வந்து, கமால் மௌலா வளாகம் மசூதி அல்ல, கோவில்தான் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மதங்கள் பற்றிய கோட்பாடுகளும் வரலாறும் இந்தத் தீர்ப்புடன் இயைந்ததாக இல்லை என்பதுதான் வேதனையான ஒன்று. இந்தியாவில் தோன்றிய வேத மதத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்த காரணத்தால், அதற்கு எதிர்வினையாக உருவானவைதான் பௌத்தமும் சமணமும் என்பதை வரலாற்றுச் சான்று கள் நிலைநிறுத்தியுள்ளன.

இந்தியா மட்டுமல்லாது தமிழ்நாட்டின் வரலாற்றி லும் இந்து மதம், பௌத்தம், சமணம் ஆகிய மதங்க ளுக்கு இடையே முரண்பாடுகள் இருந்ததும், பல சமயங்களில் இம்முரண்பாடுகள் வன்முறையாக வெடித்ததும் போன்ற நிகழ்வுகளை பல ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன. தமிழ்நாட்டில் சைவ மற்றும் வைணவ ஆன்மீகவாதிகள் எந்த அளவுக்குச் சமணம் மற்றும் பௌத்தம் மீது வெறுப்பு கொண்டி ருந்தனர் என்பதற்குத் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாடல் ஒரு சான்று:

“சமணர் மற்றும் சாக்கியர்(பவுத்தர்) தலையை ஆங்கே அறுப்பதே கருமம் கண்டாய் அரங்க மாநகர் உளானே”

சமணர் மற்றும் பௌத்தர் தலையை அறுப்பதே தனது கடமை எனவும், அதற்கு அரங்கநாதர் அருள வேண்டும் எனவும் அவர் பாடியுள்ளார். அதேபோல சம்பந்தர் கீழ்க்கண்டவாறு தனது வெறுப்பை வெளிப்படுத்துகிறார்:

“புத்தரும் புந்தியில்லாத சமணரும் பொய்ம்மொ ழியல்லாமல் மெய்த்தவம் பேசிடமாட்டார்”

எவ்வளவு வெறுப்பும் வன்மமும் இருந்தால் இப்படிப் பாடத் துணிவார்கள் என்பதை நாம் உணர லாம். தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல பகுதி களில் பௌத்த மற்றும் சமணக் கோவில்கள் சைவ மற்றும் வைணவக் கோவில்களாக மாற்றப் பட்டன என்பதை கே.ஆர்.சீனிவாசன், மயிலை சீனி. வேங்கடசாமி, சம்பக்லட்சுமி உட்பட பல வரலாற்றாசி ரியர்கள் நிலைநாட்டியுள்ளனர். பௌத்தம் தனி மதமாக இருந்த காரணத்தால்தான் அம்பேத்கர் அவர்கள் அந்த மதத்தைத் தழுவினார். பௌத்தம், சமணம், சீக்கியம் ஆகிய இந்தியாவில் தோன்றிய மதங்கள் இந்து மதத்தின் கிளைகள்தான் என்பது சங் பரிவாரத்தின் வாதம். இதனையே நீதிமன்றம் பிரதிபலிப்பது மிகவும் கவலைக்குரியது.

புறக்கணிக்கப்படும் 1991 சட்டம்

இந்தியாவின் நீண்ட வரலாற்றில் சைவம், வைணவம், பௌத்தம், சமணம் ஆகியவற்றுக்கு இடையே முரண்பாடுகள் தோன்றி வன்முறைகள் நடந்துள்ளன. பின்னர் இஸ்லாத்தின் வரவு இந்த முரண்பாடுகளுக்குப் புதிய வடிவம் கொடுத்தது. முரண் பாடுகள் காரணமாக அனைத்துப் பிரிவினரின் வழி பாட்டுத் தலங்களும் தாக்கப்பட்டன. அதே சம யத்தில் இந்த மதப்பிரிவினரிடையே ஒற்றுமைக்கான அம்சங்களும் வெளிப்பட்டன. கோவில்கள் இஸ்லாமிய மன்னர்களால் கட்டப்பட்டுப் பராமரிக்கப் பட்டன; இந்து மன்னர்கள் மசூதிகளைக் கட்டிப் பாதுகாத்தனர். இஸ்லாமிய இளவரசர்கள் ராஜபுத்திர அரசவம்சப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதும், மறுபுறத்தில் கிருஷ்ணதேவராயர் போன்ற வைணவ பக்தர்கள் தமது மகளைப் பாமினி சுல்தானுக்குத் திருமணம் செய்வது போன்ற பல ஒற்றுமை அம்சங்களும் நிகழ்ந்துள்ளன.

பல்வேறு மதப்பிரிவினரிடையே பண்பாட்டு அம்சங்களும் பழக்க வழக்கங்களும் கொடுக்கப் பட்டன, எடுக்கப்பட்டன. இஸ்லாமிய மன்னரின் படை களுக்கு இந்துக்கள் தளபதியாக இருப்பதும், இந்து மன்னர்களுக்கு இஸ்லாமியர்கள் தளபதியாக இருப்பதும் நடந்துள்ளன. எனவேதான், வழிபாட்டுத் தலங்களின் வரலாறு மக்களிடையே பிளவை உரு வாக்கக் கூடாது என்பதற்காக, பாபர் மசூதி இடிப்பின் வலி மிகுந்த பின்விளைவுகளின் பின்னணியில் 1991 வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப் பட்டது.

1947 ஆகஸ்ட் 15 அன்று ஒரு வழிபாட்டுத் தலத்தின் தன்மை எதுவோ அதுவே தொடர வேண்டும் (அதன் பழைய வரலாறு எதுவாக இருந்தாலும்) என இச்சட்டம் கூறுகிறது. இது சில மசூதிகளுக்கு மட்டு மல்ல, பௌத்த சமணக் கோவில்களாக இருந்து சைவ வைணவக் கோவில்களாக மாறிய வழிபாட்டுத் தலங்க ளுக்கும் பொருந்தும். எனினும், இச்சட்டம் ஒரு வழி பாட்டுத் தலத்தை ஆய்வு செய்வதைத் தடுக்க வில்லை எனும் நீதிபதி சந்திரசூட்டின் விசித்திரமான தீர்ப்பு பல விபரீதக் குழப்பங்களுக்கு வழிவகுத்தது

ஞானவாபி மசூதி, சம்பல் மசூதி, கமால் மௌலா மசூதி எனத் தொடரும் இந்துத்துவா சக்திகள் குறி வைத்துள்ள இந்தப் பட்டியல் தாஜ்மகால், குதுப்மினார், அஜ்மீர் தர்கா, திருப்பரங்குன்றம் தர்கா மட்டுமல்லாது பல தேவாலயங்களும் உள்ள நீண்ட பட்டியலாக உருவெடுத்துள்ளது. மக்கள் சந்திக்கும் விலைவாசி உயர்வு, வேலையின்மை, வாழ்வாதாரத் துன்பங்கள் ஆகிய பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை மடைமாற்ற இவை சிறந்த வழிமுறைக ளாக மதவாதிகளுக்குப் பயன்படுகின்றன. மதப்பிளவுவாதத்தைப் பின்னுக்குத் தள்ளும் அந்தப் பெரும் கடமையுடன், மக்களின் பொருளாதாரத் துன் பங்களுக்கும் சேர்த்து களம் காண வேண்டிய தேவை கூடுதலாக முன்வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, கெடு வாய்ப்பாக நீதித்துறையின் தவறான தீர்ப்புக ளையும் நாம் எதிர்க்க வேண்டியுள்ளது. - ருச்சிகா சர்மாவின் கட்டுரை)