தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீதிமன்றம் வழியாக போஜ்சாலா வளாகத்தை அபகரித்த சங்-பரிவாரங்கள் மே 23-இல் சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்

18 May 2026, 10:35 pm
நீதிமன்றம் வழியாக போஜ்சாலா வளாகத்தை அபகரித்த சங்-பரிவாரங்கள் மே 23-இல் சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்

நீதிமன்றம் வழியாக போஜ்சாலா வளாகத்தை அபகரித்த சங்-பரிவாரங்கள் மே 23-இல் சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்

சென்னை, மே 18 - நீதிமன்றத்தைப் பயன்படுத்தி, போஜ்சாலா வளாகத்தை சங்-பரிவாரங்கள் அபகரித்திருக்கும் நிலையில், தீர்ப்பைத் திருத்தக் கோரியும், 1991 மத வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை நிலைநிறுத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, சிறுபான்மை நலக்குழுவின் மாநிலத் தலைவர் எஸ். நூர் முகமது, மாநிலப் பொதுச்செயலாளர் பி. செந்தில்குமார் ஆகியோர் அறிக்கை விடுத்துள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

தொழுகை அனுமதியை ரத்து செய்த தொல்லியத்துறை

மத்தியப்பிரதேச மாநிலம் தார் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க போஜ்சாலா வளாகம் மற்றும் கமால் மவுலா மசூதி அமைந்துள்ள இடம் சரஸ்வதி கோவில் என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் முஸ்லிம்கள் தொழுகை நடத்த இந்திய தொல்லியல் துறை அளித்த அனுமதியை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது. முஸ்லிம்கள் விரும்பினால், அவர்கள் மசூதி கட்டிக் கொள்வதற்கு மாநில அரசு வேறு இடம் வழங்கலாம் என்றும் கூறியுள்ள நீதிமன்றம், முஸ்லிம் மற்றும் சமண சமூகத்தினர் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது. கமால் மவுலா மசூதி அமைந்து ள்ள இடம், 11-ஆம் நூற்றாண்டில் கோவிலாக இருந்தது என்பதை உறுதி செய்வதாகவும் நீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பு, பாபர் மசூதி ராமஜென்ம பூமி உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிரொலிப்பதாக உள்ளது.

புதிய புதிய பிரச்சனைகளை கிளப்பும் சங்-பரிவாரங்கள்

தற்போதும் மசூதி கோவில் தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. நாடு முழுவதும் பல ஆண்டுகளாக வாரணாசி கியான் வாபி மசூதி மற்றும் மதுரா ஷாயி ஈத்கா மசூதி வழக்கு போன்றவைகளும் உள்ளன. தற்போது புதிதாக 1800 கோவில் - மசூதி தொடர்பான சர்ச்சைகளை ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் அமைப்புகள் உருவாக்கி உள்ளனர். 1991-ஆம் ஆண்டு உருவாக்க ப்பட்ட மத வழிபாட்டு தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1947 ஆகஸ்ட் 15 அன்றைய நிலையிலேயே தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளது. ஆனால் இன்று நீதிமன்றங்கள் இச்சட்டத்தை மீறி தீர்ப்புகளை வழங்கி வருகின்றன. தொல்லியல் துறையும் உடனடியாக புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. தீர்ப்பு வெளியானவுடன் இந்து மதவெறி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போஜ் சாலா வளாகத்தில் பூஜை செய்துள்ளனர்.

அமைதியைக் குலைக்கும் சதித் திட்டங்கள்

மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக மாறியுள்ளது. தமிழ்நாட்டிலும் திருப்பரங்குன்றம் போன்ற தீர்ப்புகளும் சமூக அமைதி, மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிப்பதாக மாறி உள்ளது. நாட்டு மக்களின் மோசமடைந்து வரும் வாழ்நிலை, தாழ்ந்து வரும் பொருளாதார நிலைமை இவற்றிலிருந்து இதுபோன்ற தீர்ப்புகள் மக்களின் கவனத்தை திசை திருப்பும் செயலாக உருமாறி வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். மதவெறி சக்திகளின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இத்தகைய தீர்ப்புகள் மாறியுள்ளன. எனவே, 1991-ஆம் ஆண்டு மத வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டம் பாதுகாக்கப்பட்டு நீதி நிலை நிறுத்தப்பட வேண்டும். இந்தத் தீர்ப்பு சட்டத்திற்கு புறம்பாக அமையப் பெற்றுள்ளதால் திருத்தப்பட வேண்டிய தீர்ப்பாகும்.

சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்த வேண்டும்

எனவே, நீதிமன்றங்கள் இது போன்ற வழக்குகளை ஏற்கக் கூடாது என வலியுறுத்தியும், நீதிமன்றங்களைப் பயன்படுத்தி சிறுபான்மை மக்களின் மத வழிபாட்டு உரிமையை பறிக்கும் சங்-பரிவார அமைப்புகளை கண்டித்தும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மே 23 (சனிக்கிழமை) அன்று கண்டன இயக்கங்களை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம், சட்டத்தின் ஆட்சி என்பதை வலியுறுத்தி நடைபெறும் கண்டன இயக்கத்தில் அனைத்து பகுதி மக்களும் பங்கேற்று ஆதரவு தர வேண்டுமென பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.