பேரூராட்சி கடைகள் ஏலத்தில் முறைகேடு ஆட்சியரிடம் வணிகர் சங்கம் புகார்
9 hours before
<p><strong>பேரூராட்சி கடைகள் ஏலத்தில் முறைகேடு ஆட்சியரிடம் வணிகர் சங்கம் புகார்</strong></p><p>ஈரோடு, செப். 14– பவானிசாகர் பேரூராட்சியில் கடைகள் ஏலம் விட்டதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் வணிகர் சங்கம் புகார் அளித்துள்ளது.பவானிசாகர் பேரூராட்சியில் காலியிடக் கடைகள் ஏலம் விட்டதில் வைப்புத் தொகை மற்றும் வாடகையாக 20 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டு ரசீது வழங்கப்பட்டது. ஆனால் பொது ஏலம் எனக் கூறிவிட்டு தலைவர் விரும்பியவர்களுக்கே கடைகள் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>பாதிக்கப்பட்ட ரமேஷ் என்பவர் கூறுகையில், ”நான் விண்ணப்பித்த கடை ஆனந்த் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனது தொகையைவாங்கிவிட்டு வேறு நபருக்குக் கடை ஒதுக்கிய பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.அதேபோல, ராபியா என்பவருக்கு அரசு பள்ளி முன்புறம் கடை ஒதுக்கப்பட்டது. பள்ளி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு கடை கேட்டபோது, அவருக்குப் பயன்படாத இடத்தை அதிகாரிகள் காட்டுகின்றனர்.இவ்வாறான முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரியநிவாரணம் வழங்க வேண்டும் என பவானிசாகர் வட்டார ஒருங்கிணைந்த வணிகர் நலச்சங்கசெயலாளர் காசிவிஸ்வநாதன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.</p>
