பவானிசாகர் மீனவர்களின் போராட்டம் முடிவிற்கு வந்தது!
30 Oct 2026, 11:59 pm

பவானிசாகர் மீனவர்களின் போராட்டம் முடிவிற்கு வந்தது!

ஈரோடு, அக்.30-பவானிசாகர் மீனவர்களின் போராட்டம் வெள்ளியன்று முடிவிற்கு வந்தது.ஈரோடு மாவட்டம், பவானிசாகர்அணை பகுதியை சேர்ந்த சுமார் 1500 மீனவர்கள், சிறுமுகை மீனவர்கூட்டுறவு சங்கம் மற்றும் பவானிசாகர் மீனவர் கூட்டுறவு சங்கம் அமைத்து, அணையில் மீன்பிடி உரிமை பெற்று வந்தனர். குத்தகைஉரிமைத்தொகை செலுத்தவில்லை என கூட்டுறவு சங்கங்களின் மீன்பிடிஉரிமையை மீன்வளர்ச்சி கழகம்கடந்த 26.7.2026 அன்று ரத்து செய்யப்பட்டது. அதேசமயம், உக்ரா என்ற தனியார் நிறுவனத்திற்கு மீன்பிடி உரிமையை வழங்கியது. இதனை எதிர்க்க முடியாத மீனவர்கள் தனியாருக்கு மீன்பிடித்து கொடுத்து வந்தனர். இதற்கான கூலியாக பிடித்த மீனில் 3 இல் ஒரு பகுதியை கூலிக்கு பதில் கொடுத்தனர். இதனை ஆட்சேபித்த மீனவர்கள் கூட்டுறவு சங்கம் கொடுத்த தொகைக்கு இணையான கூலி கொடுக்க வேண்டும் என்று கேட்டனர். இதனால் கடந்த10.10.2026 முதல் நியாயமற்ற வகையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம் மற்றும் மீன்வளத்துறை மீன்பிடிக்க தடை பிறப்பித்தது.

இதனை எதிர்த்து கடந்த 20ஆம்தேதி சிஐடியு மீனவர் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்புப் போராட்டம்நடைபெற்றது. இதுகுறித்து மாவட்டநிர்வாகத்திற்கும் முறையீடு செய்யப்பட்டது. மீன்வளத்துறை இணை,துணை இயக்குநர்கள், மீன் வளர்ச்சிக்கழக மேலாளர், துணை மேலாளர், துணை காவல் கண்காணிப்பாளர், பவானிசாகர் காவல் ஆய்வாளர் ஆகியோர் பங்கேற்ற பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. உக்ரா நிறுவனத்தினரும் பங்கேற்றனர். மீனவ சங்க பிரதிநிதிகள் தரப்பில் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், மாவட்டச் செயலாளர் கே.மாரப்பன், பவானிசாகர்மண்டல மீன்பிடி மற்றும் மீன் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஏ.கே.பழனிசாமி, பொதுச்செயலாளர் எல்.சேகர், பொருளாளர் டி.ரமேஷ்,நடராஜ், காசி விஸ்வநாதன் மற்றும்சங்க நிர்வாகிகள் செல்வராஜ், சரவணன், சுரேஷ், பழனிசாமி, பொங்கியண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இப்பேச்சுவார்த்தையில் தொழிலாளர்கள் தரப்பில் வைக்கப்பட்டகூலி உயர்வு கோரிக்கை ஒப்பந்தாதாரர்கள் மற்றும் மீன்வளத்துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் தொழிலாளர் நலன் கருதிமுன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில், வெள்ளியன்று முதல் பவானிசாகர் அணையில் மீன்பிடி தொழிலார்கள்மீண்டும் மீன்பிடிக்க முடிவு செய்தனர். இதன் மூலம் கடந்த 20 நாட்களாக பவானிசாகர் சுற்றுவட்டப் பகுதியில் நிலவிய அசாதாரணமான சூழல் தற்போது இயல்பு நிலைக்குதிரும்பியுள்ளது.