தொழில் நுட்பக்குழு அமைத்து நீர் பங்கீடு செய்திடுக
17 Jul 2026, 11:23 pm
<p><strong>தொழில் நுட்பக்குழு அமைத்து நீர் பங்கீடு செய்திடுக</strong></p><p>ஈரோடு, ஜுலை 17- பவானிசாகர் அணை மேலாண்மை தொழில்நுட்பக் குழு அமைத்து நீர் பங்கீடு செய்ய தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் மாதாந்திர விவ சாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் ஏ.எம்.முனுசாமி, பவானிசாகர் அணையிலிருந்து கீழ் பவானி பாசன திட்டம், கொடிவேரி தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காளிங்கராயன் பாசனம் ஆகிய திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. அணையில் நீர் இருப்பு குறைவாக இருக்கும் போது மேற்கண்ட பாசன கால்வாய்க ளுக்கு தண்ணீர் விடுவதில் தேவை யற்ற சர்ச்சைகள் ஏற்பட்டு வருகி றது. ஆகவே பவானிசாகர் அணை மேலாண்மை தொழில்நுட்பக் குழு அமைத்து நீர் பங்கீடு செய்ய தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார். மேலும், ஆவினில் கால்நடை மருத்துவர்கள் இல்லாததால், மாடு களுக்கு சிகிச்சை பெறவோ, காப் பீடு செய்யவோ முடியவில்லை. அத்துடன் சத்தியமங்கலம் பசு வனாபுரம் பகுதியில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் அமைத்து விளை பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி னார். முன்னதாக பயிர்களை காக்க காளிங்கராயன், கீழ்பவானி பாசனப்பகுதிக்கு சமமாக நீரை பகிர்ந்தளிக்க கோரி இரு பாசன பகுதி விவசாயிகளும் வலியுறுத்தி நூற்றுக்கணக்கான விவசாயிகள் வந்திருந்ததால் சலசலப்பு ஏற்பட் டது. மாவட்ட ஆட்சியர், மூன்று பாசன பகுதியின் நீர் தேவையும் தொழில் நுட்பக்குழு மூலம் பரி சீலனை செய்து, நீர் வளத்துறையி னரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இரு பாசன விவசா யிகளுக்குள் பிரச்சகை எழக் கூடாது. அனைத்து தரப்பும் பயன் பெறும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.</p>
