பவானி தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம்
2 Apr 2026, 3:50 pm
<p><strong>பவானி தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம்</strong></p>
<p>ஈரோடு, ஏப்.2- பவானி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம், சித்தாரில் புதனன்று நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் சார்பில் ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கே.ஏ.சேகர் (எ) கே. ஏ.சந்திரசேகர் போட்டியிடுகிறார். இந் நிலையில், அம்மாபேட்டை கிழக்கு ஒன்றியத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு, திமுக ஒன்றியச் செயலாளர் அறிவானந்தன் தலைமை வகித்தார். மத்திய மாவட்டச் செயலா ளர் தோப்பு என்.டி. வெங்கடாஜலம் விளக்க உரை யாற்றினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி. பி.பழனிசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மாணிக்கம், அந்தியூர் தாலுகா செயலா ளர் ஆர்.முருகேசன், மாற்றுத்திறனாளி கள் சங்க மாவட்டச் செயலாளர் டி. சாவித்திரி, சிபிஎம் தாலுகாகுழு உறுப் பினர்கள் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>
