பாரதியார் பிறந்த நாள் விழா
23 Dec 2025, 4:05 pm
<p><strong>பாரதியார் பிறந்த நாள் விழா</strong></p>
<p>நாகப்பட்டினம், டிச.23- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வேதாரண்யம் கிளை மற்றும் பொதுநூலகத்துறை சார்பாக, உவர்ப்பு வாசகர் வட்டம், பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் தென்னடார் வை.பழனிவேலனார் நினைவுநாள் நிகழ்வு திங்கட்கிழமை நடத்தப்பட்டது. ஆர். குழந்தைவேல், தலைமை தாங்கினார். ஆ. பக்கிரிசாமி முன்னிலை வகித்தார். க. இரமேஷ் வரவேற்புரையாற்றினார் வ. கண்ணையன், முத்துப்பேட்டை சி. செல்லத்துரை, மோகன் இங்கர்சால், இர. ஸ்ரீதர்ஷன் ஆகியோர் பாடல்கள் பாடினர். கவிஞர் துரைராஜ் கவிதை வாசித்தார். எஸ். இராசகோபால், சிப்பி செல்வம், எம். மோகனசுந்தரம், எஸ். வெற்றிச் செல்வன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். கவிஞர் அ.மீ. ஜவஹர் சிறப்புரையாற்றினார். ஆர். அருள்மொழி நன்றியுரையாற்றினார். பாரதியார் மற்றும் தென்னடார் வை. பழனிவேலனார் புகைப்படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தப்பட்டது.</p>
