பாரதியார் பிறந்தநாள் கருத்தரங்கம்
18 Dec 2025, 4:38 pm
<p><strong>பாரதியார் பிறந்தநாள் கருத்தரங்கம்</strong></p>
<p>புதுக்கோட்டை, டிச.18- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், மகாகவி பாரதியாரின் பிறந்தாள் கருத்தரங்கம் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தமுஎகச மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கருத்தரங்கில் புதுக்கோட்டை தமிழ்சங்கத் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி, தமுஎகச முன்னாள் மாவட்டச் செயலாளர் சு.மதியழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கவிஞர்கள் ரேவதி ராம், சாமிகிரிஷ், ஸ்ரீமலையப்பன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கலைமாமணி முத்துக்கிருஷ்ணன், எல்.வடிவேல், மூகை சின்னையா, மிடறு முருகதாஸ், கு.பிரேமா, அ.சரவணன் ஆகியோர் விழிப்புணர்வு பாடல்களைப் பாடினர். முன்னதாக மாவட்டச் செயலாளர் ரெ.வெள்ளைச்சாமி வரவேற்க, பொருளாளர் மு.கீதா நன்றி கூறினார்.</p>
