அவிநாசியில் பாரதியார் பிறந்த நாள் விழா
11 Dec 2025, 5:47 pm
<p><strong>அவிநாசியில் பாரதியார் பிறந்த நாள் விழா</strong></p>
<p>அவிநாசி, டிச.11- அவிநாசி அரசு பெண் கள் மேல்நிலைப் பள்ளி, அரசு கல்லூரியில் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டா டப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரர், மகாகவி பாரதியாரின் 144ஆவது பிறந்தநாள் டிசம்பர் 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள மகாகவி பாரதியாரின் உருவச்சிலைக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் கள் சங்க அவிநாசி கிளை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பாரதியார் குறித்து பள்ளி குழந்தை களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைப்பின் மாவட்டத் தலைவர் சம்பத் குமார், அவிநாசி கிளைச் செயலாளர் தினகரன், துணைத் தலை வர் ராஜேந்திரன், சிபிஎம் கிளைச் செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல அவிநாசி அரசு கலை கல்லூ ரியில் தமிழ் துறை சார்பில் பாரதியார் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பொறுப்பு முதல்வர் முனை வர் ஹேமலதா, தமிழ் துறையின் தலைவர் பேராசிரியர் மணிவண்ணன், பேராசிரியர்கள் தரணி, பானு, முகுந்தன், ஜோதி பாண்டியன், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். அத்துடன் பெரியாயிபாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் பாரதியாரும் அறிவிய லும் என்ற தலைப்பில் அறிவியல் இயக்க பொறுப்பாளர் வி.ராமமூர்த்தி கலந்து கொண்டு 300 க்கும் மேற்பட்ட குழந்தைகளி டம், உரையாற்றினார். இந்த நிகழ்வில் தமுஎ கச அவிநாசி கிளைச் செயலாளர் தினகரன், பள்ளியின் தலைமை ஆசிரியர் வில்லியம் கார்டர் கலந்து கொண்டனர். மேலும் இப்பள் ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி தேவஸ்ரீ பாரதியார் பாடல்கள் பாடினார். இம் மாணவியைப் பள்ளி நிர்வாகம் பாராட்டி யது. மாவட்ட நிர்வாகத்தால் கைவிடப்பட்டாரா பாரதி? திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசியில் மட்டும் தான் பாரதியாருக்கு உருவச் சிலை உள்ளது. இங்கு ஆண்டு தோறும், முற் போக்கு எண்ணம் கொண்ட அமைப்பினர் பார தியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்துவது வழக்கம். ஆனால் இங் குள்ள பாரதியார் சிலைக்கு அரசு தரப்பில் மாவட்டம் நிர்வாகம் மரியாதை செய்வ தில்லை. பாரதியார் பிறந்த தினத்தை இப்ப குதியில் ஒரு விழாவாக ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள், முற் போக்கு சிந்தனையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.</p>
