தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாரதியாரின் 144வது பிறந்தநாள் விழா புதுச்சேரியில் கொண்டாட்டம்

11 Dec 2025, 5:47 pm
பாரதியாரின் 144வது பிறந்தநாள் விழா  புதுச்சேரியில் கொண்டாட்டம்
<p><strong>பாரதியாரின் 144வது பிறந்தநாள் விழா &nbsp;புதுச்சேரியில் கொண்டாட்டம்</strong></p> <p>புதுச்சேரி, டிச.11- மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் &nbsp;பிறந்த தினத்தையொட்டி &nbsp;புதுச்சேரி அரசு சார்பில் &nbsp;அவரது &nbsp;சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. &nbsp;இதனையொட்டி பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு &nbsp; முதலமைச்சர் ரங்கசாமி, &nbsp;சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், குடிமைப் பொருள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பெ. ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட திரளானோர் பாரதி யாரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். பாரதியார் இல்லம் புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வீதியில் அமைந்துள்ள &nbsp;மகாகவி பாரதியார் &nbsp;இல்லத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முற்போக்கு எழுத்தாளர் &nbsp;கலைஞர்கள் சங்கத்தின் புதுச்சேரி தலைவர் தவில் விநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயலாளர் ஆசிரியர் பச்சையம்மாள், முன்னாள் தலைவர் உமா &nbsp;எழுத்தாளர்கள் கலைஞர்கள் ரமேஷ் பைரவி, கணேசன், அமர்நாத் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு மகாகவி பாரதியாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் பாகூர் அரசு பள்ளியில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் &nbsp;சிலைக்கு முஎகச மாநில பொருளாளர் பக்தவச்சலம் தலைமையில் கலைஞர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மகாகவி சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மரியாதை &nbsp;புதுச்சேரி பாரதி பூங்காவில் அமைந்துள்ள பாரதியாரின் உருவ சிலைக்கு முதல்வர் ரங்கசாமி சபாநாயகர் அமைச்சர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். பாகூர் அரசு பள்ளியில் அமைந்துள்ள பாரதியின் சிலைக்கு முஎச மாநில பொருளாளர் பக்தவச்சலம் தலைமையில் திரளான எழுத்தாளர்கள் கலைஞர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.