படைப்பாளிகளை கொண்டாடும் பாரதி புத்தகாலயம் - ஜி.ராமகிருஷ்ணன்
19 Jan 2026, 2:23 pm

படைப்பாளிகளை கொண்டாடும் பாரதி புத்தகாலயம்

ஜனவரி 8 அன்று துவங்கிய சென்னை புத்தகக் கண்காட்சி 21 ஆம் தேதி நிறைவு பெற உள்ளது. கண்காட்சிக்கு சென்றவர்கள் லட்சக்கணக்கில். புத்தக விற்பனை பல கோடி. புத்தகக் கண்காட்சி என்பதை விட நூல்களைக் கொண்டாடும் விழாவாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை என்பதற்கு மாறாக, நிரந்தரமான கண்காட்சியை அரசு கட்டமைக்க வேண்டுமென நூல் வாசிப்பாளர்கள் விரும்புகிறார்கள். கண்காட்சியின் ஊடே இன்று (20.01.2026) பாரதி புத்தகாலயம் பதிப்பித்த நூல்களின் படைப்பாளிகளை பாராட்டும் நிகழ்ச்சியை நடத்திட உள்ளது. லாபம் ஈட்டும் நோக்கத்திற்காக அல்லாமல் வாசிப்பை ஒரு இயக்கமாக தமிழ் கூறும் நல்லுலக மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் இப்பதிப்பகம் உதயமானது.

வெள்ளிவிழா நோக்கி 25 ஆம் ஆண்டை நோக்கி வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கும் பாரதி புத்தகாலயம் பாரதி பிறந்த அன்று - டிசம்பர் 11, 2002 ஆம் ஆண்டு சென்னை, சைதாப்பேட்டையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் தோழர் என்.சங்கரய்யா, ஆர்.நல்லகண்ணு மற்றும் பேரா. பொற்கோ தொடங்கி வைத்தனர். நானும் இந்நிகழ்வில் கலந்து கொண்டது எனக்குப் பெருமையளிக்கிறது. 24 ஆண்டு பயணத்தில், 35 கிளைகள், 3000க்கு மேற்பட்ட வெளியீடுகள், ஒரு கோடிக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனை, 15,000 த்துக்கும் மேற்பட்ட தொடர் வாசகர்கள், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இடங்களில் புத்தக விற்பனை ஏற்பாடுகள், பதிப்பகத்தின் ஒருங்கிணைப்பில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் புத்தகங்களுடன் புத்தாண்டுக் கொண்டாட்டம், ஆண்டுதோறும் பிப்ரவரி 21 அன்று சிவப்பு புத்தக தினத்தை யொட்டி தமிழகம் முழுவதும் புத்தகத் திருவிழா க்கள் என பல வெற்றிப் படிகளை கடந்தாலும் சிகரத்தை எட்டிட பதிப்பகத்தில் பணியாற்றும் அனைவரும் வாசகர்களின் நல்லாதரவோடு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். புத்தகங்களுக்காக இதழ்... உலக புத்தக தினத்தில்

‘‘தமிழகமே வாசிப்போம்” பதாகையின் கீழ் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயக்கங் கள், 24 ஆண்டுகளாக புத்தகங்களுக்காக ‘புத்தகம் பேசுது’ மாத இதழ் பதிப்பகம் வெளியிட்ட நூல்களின் படைப்பாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் விருதுகளை பெற்றிருக்கிறார்கள். சாகித்ய அகாடமி, தமிழ்நாடு அரசு, கலை இலக்கிய பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம், நல்லி-திசை எட்டும், உயிர்மை, அழ.வள்ளியப்பா, கஸ்தூரி யம்மாள் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வழங்கிய சிறந்த நூல்களுக்கான பரிசுகளை பதிப்பகத்தின் படைப்பாளர்கள் பெற்றது பாரதி புத்தகாலயத்திற்கு பெருமை சேர்க்கிறது. சிறார்களுக்கான சிறு பிரசுரங்களாக இருந்தாலும் குறு நாவலாக இருந்தாலும் பொதுவான கவிதை, சிறுகதை, நாவல், வரலாறு, அறிவியல் போன்ற நூல்களாக இருந்தாலும் பெரும்பான்மையாக ஒரு சமூகப் பார்வையை ஊட்டி வளர்த்திடும் உள்ளடக்கங்களை கொண்டதாக உள்ளன. எது இலக்கியம்? “நம்முள் விமர்சன மனப்பாங்கை எழுப்பாத, நமது உள்மனதை (ஆன்மாவை), அறிவுத் தேவைகளை நிறைவேற்றாத, எந்தவிதமான உந்து சக்தியையும் வழங்காத, நமது அழகுணர்வைத் தூண்டாத

, வாழ்வின் கடினமான யதார்த்தங்களை உறுதியோடு எதிர்கொள்ள உதவாத இலக்கியத்தால் இன்று நமக்கு பயன் இல்லை. அதை இலக்கியம் என்று கூடச் சொல்ல முடியாது”. 1936 ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க அமைப்பு மாநாட்டில் அமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட, புகழ்பெற்ற எழுத்தா ளர் முன்ஷி பிரேம்சந்த் அவர்கள் ஆற்றிய தலை மை கருத்துரையில் ஒரு முக்கியமான பகுதியின் மேற்கோளைத்தான் மேலே கண்டோம். இவ்வமைப்பின் பாரம்பரியத்தில் உதயமான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் 16ஆவது மாநில மாநாட்டு அறிக்கையில் படைப்பு இலக்கியம் பற்றி ஆய்வு செய்து “நாவலுக்கு எவரையும் வசீகரிக்கும் பேராற்றல் உண்டு. எது நாவல்” என்ற கேள்வியை எழுப்பி கீழ்க்கண்ட மதிப்பீடு அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. கலாப்பூர்வ சமூக ஆய்வே நாவல் “தத்துவத்தின் கலை வடிவம் நாவல். எல்லா நாவல்களுக்குள்ளும் கலை ரீதியிலான விவாதம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. தத்துவமின்றி நாவலும் இல்லை; கலையும் இல்லை. கலாப்பூர்வமான சமூக ஆய்வே நாவல். ஒரு சமூகத்தின் கூட்டு விவாதத்தின் கலை ரீதியிலான மாபெரும் வெளிப்பாடே நாவல். எல்லாவற்றையும் வரலாற்றின் முன்னிறுத்தி விசாரிக்கும் மிக விரிவான விஸ்தாரமான வெளிப்பாட்டு வடிவமாக நாவல் இன்றும் இருந்து வருகிறது.” மதிப்பீடு செய்ததோடு நிறுத்தாமல் படைப்பாளிகளுக்கு அழுத்தமான

கீழ்க்கண்ட வேண்டுகோளையும் மாநாடு விடுத்துள்ளது. “களப்பணியும் சமூக ஆய்வும் செய்து போதிய உழைப்பைச் செலுத்திப் பெருநாவல் களைப் படைக்கும் பணியை நம் படைப்பாளிகள் இனிவரும் காலங்களில் செய்ய வேண்டும்” மேற்கண்ட அடிப்படையிலான படைப்பு இலக்கிய உள்ளடக்கங்களை கொண்ட இலக்கி யப் படைப்புகளை வெளியிட வேண்டும் என்பது தான் பாரதி புத்தகாலயத்தினுடைய நோக்கம். சிறார் இலக்கியம் சிறார் இலக்கியங்களை படைப்பதில் பாரதி புத்தகாலயம் தனது முத்திரையை பதித்துள்ளது. ஆயிஷா நடராஜனின் “ஆயிஷா”வில் துவங்கி (விற்பனை இரண்டு லட்சத்திற்கு மேல்) விஷ்ணுபுரம் சரவணனின் “கயிறு” (விற்பனை லட்சத்திற்கு மேல்), விழியனின் “மலைப் பூ” உள்ளிட்டு ஏராளமான சிறார் நூல்களை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. சிறார் இலக்கியம் பற்றி தமுஎகச-வின் மாநில மாநாட்டு அறிக்கையில் விஷ்ணுபுரம் சரவணனின் பேட்டி மேற்கோளாக கொடுக்கப்பட்டுள்ளது. “பாகுபாடுகளையும் ஒடுக்கப்படும் கார ணங்களையும் அவற்றின் அடிப்படைகளையும் சிறாரோடு உரையாடும் விதமான படைப்பு களே அவசியம். அவையே அவர்கள் பெரியவர் களானதும் எவரிடமும் பாகுபாடு காட்டாத மனித ராகவும்

எவரையும் ஒடுக்க நினைக்காத மனித ராகவும் வாழ வைக்கும். அதற்காக, வெகு தீவிரமான அரசியலை மூர்க்கமாகத் திணிக்கும் விதத்தில் எழுதி சிறாரின் குழந்தைமையைச் சிதைத்து விடக்கூடாது என்ற கவனமும் படைப்பாளிகளுக்கு மிகவும் அவசியம்” சிறார் இலக்கியம் எப்படி இருக்க வேண்டு மென்று தனது கருத்தை வெளியிட்டது மட்டு மல்ல, அவர் உருவாக்கிய ‘கயிறு’ என்ற சிறு நூல் முன்னுதாரணமாகத் திகழ்கிறது. குழந்தைகள் மேம்பட... 1930களில் சிறார்களுக்கு இலக்கியம் படைத்த பிரேம்சந்த், அந்த இலக்கியம் எப்படி இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். “ஒரு குழந்தைக்கு முதன்மையாக வழங்கப்பட வேண்டிய கல்வி, அவன்/அவள் வாழ்க்கையில் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளக்

கூடியதாக இருக்க வேண்டும். குழந்தைகள் நல்லதும் கெட்டது மான விளைவுகளை தங்கள் மனதின் உள்ளு ணர்வுக் கண்களால் உணர்ந்து புரிந்து கொள்ளும் அளவிற்கான திறனும், நல்லறிவும் கொண்டவர்களாக மேம்பட வேண்டும்.” பல்வேறு தளங்களில் பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள நூல்களை பற்றியும் - படைப்பாளிகளை பற்றியும் முழுமையாக குறிப்பிடுவதற்கு ஏடு இடம் தராது. கடந்த 2002 ஆம் ஆண்டு துவங்கி இன்று வரையிலான பாரதி புத்தகாலயத்தினுடைய - படைப்பாளிகளை கொண்டாடுவதற்கான நிகழ்ச்சி புத்தகக் கண்காட்சி வளாகத்தில் 20.01.2026 செவ்வாய் அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது. படைப்பாளிகளை கொண்டாட நீங்களும் வாருங்கள்.