தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இயக்குநர் கே.பாக்யராஜ் காலமானார்! அரசியல் தலைவர்கள் - திரையுலகினர் நேரில் அஞ்சலி

27 Jun 2026, 9:51 pm
இயக்குநர் கே.பாக்யராஜ் காலமானார்! அரசியல் தலைவர்கள் - திரையுலகினர் நேரில் அஞ்சலி

இயக்குநர் கே.பாக்யராஜ் காலமானார்! அரசியல் தலைவர்கள் - திரையுலகினர் நேரில் அஞ்சலி

சென்னை, ஜூன் 27 - தமிழ்த் திரைப்படத்துறையின் புகழ் பெற்ற இயக்குநர் கே. பாக்யராஜ், சனிக்கிழமையன்று காலமானார். அவ ருக்கு வயது 73. இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசைய மைப்பாளர் என பன்முகத் திறமை யால் தமிழ்ச் சினிமாவில் தனி முத்திரை பதித்த கே. பாக்யராஜ், சுமார் 40 ஆண்டு களாக ‘பாக்யா’ என்ற வார இதழையும் நடத்தி வந்தார். அவரது மறைவு திரை யுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது. பாக்யராஜ், கடந்த சில நாட்களாக லேசான உடல்நலக் குறைவால் பாதிக் கப்பட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமையன்று காலை வீட்டிலிருந்த போது, அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. குடும் பத்தினர் அவரை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், வழி யிலேயே உயிர் பிரிந்தது.

பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளி

ஈரோடு மாவட்டம், வெள்ளாங் கோவில் கிராமத்தில் 1953-ஆம் ஆண்டு பிறந்தவரான பாக்யராஜ், மறைந்த இயக்குநர் பாரதிராஜாவிடம் ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் உதவி இயக்குநராக, திரைத் துறையில் அடியெடுத்து வைத்தார். அடுத்த சில ஆண்டுகளிலேயே 1979-இல் ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து, ‘முந்தானை முடிச்சு’, ‘மவுன கீதங்கள்’, ‘அந்த 7 நாட்கள்’ என தனது அசாத்திய திரைக்கதை மற்றும் நகைச்சுவை பாணியால் முன்னணி இயக்குநரானார். அவரது திரைப்படங்கள், பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. 25-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய பாக்யராஜ், தாவணிக் கனவுகள் துவங்கி 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் சிறந்து விளங்கினார். ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுக மான அவர், பாண்டியராஜன், பார்த்தி பன் போன்ற திறமையான இயக்கு நர்களையும் உருவாக்கினார். இயக்குநர் பாக்யராஜ், 1984-ஆம் ஆண்டு தன்னுடன் திரைத்துறையில் பணியாற்றிய நடிகை பூர்ணிமாவைத் திருமணம் கொண்டார். இவர்களுக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் உள்ளனர்.

50 ஆண்டுகளை நிறைவு செய்தவர்

அண்மையில், திரைத்துறையில் தனது 50-ஆவது ஆண்டை பாக்யராஜ் கொண்டாடினார். உடல் நலிவுற்றிருந்த நிலையிலும், பாக்யராஜின் குருநாதர் எனப்படும் இயக்குநர் பாரதிராஜா அந்த விழாவில் கலந்து கொண்டு பாராட்டினார். இதனிடையே, இயக்குநர் பாரதி ராஜா, கடந்த ஜூன் 10 அன்று காலமா னார். அவரது மறைவு தந்த அதிர்ச்சி யிலிருந்து திரைத்துறை இன்னும் மீண்டுவராத நிலையில், 17 நாட்களில் அவரது முதன்மைச் சீடரான பாக்ய ராஜும் மறைந்திருப்பது தமிழ்த் திரை யுலக ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தி யுள்ளது. விஜய் - மு.க. ஸ்டாலின் இயக்குநர் பாக்யராஜின் மறைவுச் செய்தி அறிந்ததும், சென்னை நுங்கம் பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பாக்யராஜ் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்டோரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஆ.ராசா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர். பத்ரி, வெ. ராஜ சேகரன், விசிக தலைவர் தொல். திருமா வளவன், தேமுதிக பொதுச்செயலா ளர் பிரேமலதா விஜயகாந்த் உள் ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தி னர்.

தலைவர்கள் - திரைத்துறையினர்

தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வ நாத் அர்லேகர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த், சிவக்குமார், சத்ய ராஜ், சரத்குமார், ராதிகா, சுகாசினி, ஜெயராம், இயக்குநர்கள் மணி ரத்னம், பி. வாசு, கங்கை அமரன், பாண்டியராஜன், பார்த்திபன், சீமான், கரு.பழனியப்பன், அமீர், சமுத்திரக் கனி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் பாக்யராஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.