தீக்கதிர் முக்கிய செய்திகள்
13 Dec 2025, 4:23 pm

மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும்: முதலமைச்சர்

சென்னை, டிச.13 - மகளிர் உரிமைத் தொகைக்கான பட்டியலில் விடுபட்ட வர்களான கூடுதல் 17 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை கிடைக்கும் வகையிலான இரண்டாம் கட்ட விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். ‘வெல்லும் தமிழ்ப்பெண்கள்’ என்ற பெயரில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் ஒன்றிணைந்து, தங்களின் வெற்றிக் கதைகளை யும் பெண்கள் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு செய்து வரும் முன்னெடுப்புகள் குறித்தும் புகழ்ந்து பேசினர். நிகழ்ச்சியில் ஐபிஎஸ், ஐஏஎஸ், ஐஎஃஎஸ் அதிகாரிகள், காவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு பெண்கள் மேடையில் ஏற்றி கவுரவிக்கப்பட்டனர். மேலும் அரசின் திட்டத்தால் பயனடைந்த பெண்கள் தங்களது அனுப வங்களை பகிர்ந்து கொண்டனர். 101 வயதான சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் ஆகியோ ருக்கு தமிழக அரசு சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “தலைநிமி ரும் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்ந்து நடைபோட, நிச்சயம் உரிமைத்தொகை உயரும்” என்றார். துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பெண்ணுரிமையில் இந்தியா விற்கே தமிழ்நாடுதான் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது” என்றார்.

வாக்காளர்களை நீக்கிவிட்டு வாக்குச்சாவடிகளை உயர்த்துவதா? ஆர்.எஸ்.பாரதி கேள்வி

சென்னை, டிச.13 - வாக்காளர்களை நீக்கிவிட்டு வாக்குச்சாவடிகளை உயர்த்துவது ஏன் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “தமிழகத்தில் 10 சதவீத வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 68,467 ஆக இருந்த நிலையில் 75,035 ஆக அதிகரித்துள்ளது. அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்கா மல் வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் ஆணையம் உயர்த்தியது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். “திமுகவின் கடுமையான முயற்சியால் வாக்காளர் பட்டிய லில் பெரும்பாலானோர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் நாட்டில் டிசம்பர் 19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதாகவும் அவர் கூறினார். சுமார் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், எந்த அளவுக்கு உண்மை என்பது பட்டியல் வெளியீட்டிற்குப் பிறகே தெரியும் என்றும், தகுதியான வாக்காளர்களை மீண்டும் சேர்க்கும் பணியில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தார். மக்களவைத் தேர்தலின்போது அமித் ஷா 8 முறை தமிழ்நாட்டுக்கு வந்தார். ஆனால் திமுக வெற்றி 39-இல் இருந்து 40 ஆக அதிகரித்ததே தவிர, குறையவில்லை” என்றும் அவர் கூறி னார்.

கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்பு: பிரேமலதா

சென்னை, டிச.13 - 2026 தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு செய்தியா ளர்கள் சந்திப்பில் பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த், “அனைத்து கட்சிகளும் எங்களுடன் தோழமையாக உள்ளன. அதனால் கூட்டணி என கூற முடியாது. எங்கள் கூட்டணி குறித்த அறிவிப்பு வரும் ஜனவரி 9ஆம் தேதி தெரி விக்கப்படும்” என்று கூறினார். கூட்டணியில் எத்தனை தொகுதி யில் போட்டியிடுவீர்கள் என்ற கேள்விக்கு, 234 தொகுதி களுமே எங்கள் இலக்குதான் என்று பிரேமலதா பதில் அளித்தார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் 2001 முதல் 2006 வரை அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை 2006-இல் ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. தூத்துக்குடி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமைச்ச ரின் மனைவி, சகோதரர்கள் யாரும் ஆஜராக வில்லை. அமைச்சரின் மூன்று மகன்களில் ஒருவரான மகேஸ்வரன் மட்டுமே ஆஜரானார். இதையடுத்து வழக்கை டிச.17 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து மாவட்ட நீதிமன்றம் உத்தர விட்டது.

மகாத்மா காந்தி பெயர் நீக்கத்திற்கு கண்டனம்

சென்னை: நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கும் ஒன்றிய பாஜக அரசின் முயற் சியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலை வர் செல்வப்பெருந்தகை வன்மையாக கண்டித்து உள்ளார். 2009 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்று அழைக்கப்படும் இத் திட்டத்தை ‘பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோ ஜனா’ என்று பெயர் மாற்றம் செய்ய ஒன்றிய பாஜக அரசு மசோதா தாக்கல் செய்ய உள்ளது. ஆர்எஸ்எஸ் தூண்டுதலால் இத்த கைய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டி யுள்ளார்.

ஜனவரியில் மடிக்கணினி அமைச்சர் தகவல்

சென்னை: மாண வர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்துக்குள் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தேர்த லுக்காக திட்டங்களை செயல்படுத்துவதில்லை என்றும், திமுக அரசு அளித்த வாக்குறுதி களை நிறைவேற்றுவதே நோக்கம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டு உள்ளார்.