பெத்தேல் நகரில் குடிநீர் குழாய் சீரமைப்பு
16 Jun 2026, 12:20 am
<p><strong>பெத்தேல் நகரில் குடிநீர் குழாய் சீரமைப்பு</strong></p><p>சென்னை, ஜூன் 15 – குடியிருப்போரின் கோரிக்கையை ஏற்று பெத்தேல் நகர் குடிநீர் குழாய் உடனடியாக சீரமைக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி 194 வது வட்டம் ஈஞ்சம் பாக்கம் பெத்தேல் நகரில் முட்டை கடை சந்திப்பு அருகே நடைபெற்று வந்த மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நிறுத்தப் பட்டுள்ளது. கால்வாய் பணியை உடனடியாக முடிக்க வேண்டும். மழை நீர் கால்வாய் பணி யின்போது பழுதடைந்த குடிநீர் குழாயை சீர் செய்து மக்களுக்கு தடை யற்ற குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஈஞ்சம்பாக்கம் மக்கள் நல்வாழ்வு இயக்கத்தினர் சோழிங்கநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் ஈசி ஆர் பி.சரவணனிடம் திங்க ளன்று (ஜூன் 15) மனு அளித்தனர். இதனையடுத்து துறை அதிகாரிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் நேரடிய கள ஆய்வுக்கு வந்தார். கால்வாயை பார்வையிட்டு பணிகளை தொடங்க அறிவுறுத்தினார்.குடிநீர் குழாயை சீர் செய்து உடனடியாக தடையற்ற குடிநீர் வழங்கவும் பணித்தார். இதனையடுத்து பணிகள் தொடங்கப்பட்டது. மேலும், 10 நாட்களுக் குள்ளாக மழை நீர் வடி கால்வாய் முழுமையாக கட்டி முடிக்கப்படும். ஆபத்தான நிலையில் உள்ள உயர் மின்னழுத்த கம்பமும் சீரமைக்கப்படும் என்று மக்களிடம் உறுதி யளித்தார்.</p>
