சென்னை விரைவு செய்திகள்
10 Jan 2026, 2:48 pm

பெண்களுக்கான சிறந்த நகரங்கள்: தேசிய அளவில் சென்னை 2-ஆம் இடம் பிடித்து சாதனை

சென்னை, ஜன. 10- ‘அவதார்’ குழுமம் வெளியிட்ட “இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் 2025” பட்டியலில் சென்னை தேசிய அளவில் 2-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. இப்பட்டியலில் கோயம்புத்தூர் 10-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. முதல் 25 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த திருச்சி (13), மதுரை (15), சேலம் (18), வேலூர் (19), ஈரோடு (25) என மொத்தம் 7 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. பாதுகாப்பு, வேலைவாய்ப்பு மற்றும் பெண்களுக்கான வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதை இது காட்டுகிறது.

மாடியில் இருந்து கீழே குதித்து பெண் தற்கொலை

சென்னை, ஜன. 10- சென்னை பாலவாக்கத்தில் மாடியில் இருந்து கீழே குதித்து பெண் தற்கொலை செய்துக் கொண்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலவாக்கம் பல்கலை நகரை சேர்ந்தவர் வீரப்பன் (60). இவர் மனைவி அன்புக்கரசி (50). இவர்களுக்கு பாலகுரு என்ற மகன் உள்ளார். வீரப்பன், அம்பத்தூரில் உள்ள ஒரு டீக்கடையில் காசாளராக வேலை செய்து வருகிறார். பாலகுரு, பூந்தமல்லி அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. மூன்றாமாண்டு படிக்கிறார். வீரப்பன், படிப்பு தேவைக்ககாக அண்மையில் அன்புக்கரசி தங்கநகையை அடமானம் வைத்துள்ளார். இதன் பின்னர் அன்புக்கரசி மிகுந்த மன உளைச்சலுடனும், விரக்தியுடனும் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அன்புக்கரசி, தாங்கள் வசிக்கும் மாடியில் இருந்து வெள்ளிக்கிழமை கீழே குதித்தார். இதில் பலத்தக் காயமடைந்த அன்புக்கரசி, சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இது குறித்து நீலாங்கரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

சென்னை, ஜன. 10- சென்னை செனாய் நகரில் உள்ள மாநகராட்சி வாகன பணிமனையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் பா.கவினேஷ் (18). இவர், சென்னை செனாய்நகர் முதலாவது பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி வாகன பணிமனையில் தற்காலிக ஊழியராக 3 மாதங்களாக வேலை செய்து வந்தார். இந்த பணிமனையில் மாநகராட்சி வாகனங்களை வாட்டர் வாஷ் புதுப்பித்து வழங்கும் வேலை செய்து வந்தார். கவினேஷ், அங்கு ஒரு மாநகராட்சி குப்பை அள்ளும் ஆட்டோவை வெள்ளிக்கிழமை வாட்டர் வாஷ் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மின்வயர் சேதமடைந்து, மின்கசிவு ஏற்பட்டிருந்ததை கவினேஷ் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. விபத்தில் பலத்தக் காயமடைந்த கவினேஷ், சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இது குறித்து அமைந்தகரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.