தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெர்லின் தேர்தலில் அதிர்ச்சி தோல்வி முற்போக்கு கட்சியான ‘தி லிங்கே’ வரலாற்று வெற்றி!

27 Sept 2026, 9:36 pm
பெர்லின் தேர்தலில் அதிர்ச்சி தோல்வி  முற்போக்கு கட்சியான  ‘தி லிங்கே’ வரலாற்று வெற்றி!
<p><strong>பெர்லின் தேர்தலில் அதிர்ச்சி தோல்வி முற்போக்கு கட்சியான ‘தி லிங்கே’ வரலாற்று வெற்றி!</strong></p><p>ஜெர்மனியில் செப்டம்பர் 20 அன்று பெர்லினிலும், மெக்லென்பர்கிலும் நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில், ஆளும் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் கட்சி பெரும் சரிவைச் சந்தித்தது. பெர்லினில் முற்போக்கு கட்சியான தி லிங்கே 25 சதவீத வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. ஆளுங்கூட்டணி ஜெர்மனியை ராணுவமயமாக்குவதாலும், சமூக நலத் திட்டங்களை வெட்டிச் சுருக்குவதாலும் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. மெக்லென்பர்க்கில் தீவிர வலதுசாரிக் கட்சியான ஜெர்மனிக்கு மாற்று என்ற கட்சி வெற்றி பெற்றது.கடந்த 2021இல் பெர்லினில் 3000-க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்டுள்ள ரியல் எஸ்டேட் கம்பெனிகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய மக்கள் வாக்களித்திருந்தாலும், ஸ்தல நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், சமூகமயமாக்குவதை ஆதரித்துத் தி லிங்கே கட்சி பிரச்சாரம் மேற்கொண்டது. ஐரோப்பாவில் தீவிர வலதுசாரிகள் வென்றுவரும் சூழலில், பெர்லினில் முற்போக்குக் கட்சி வெற்றி பெற்றது ஒரு முக்கிய திருப்புமுனை என ஐரோப்பிய இடதுசாரி முற்போக்குக் கட்சிகள் அங்கீகரித்துள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.