முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

19 Jun 2026, 8:52 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

அமெரிக்க பேஷன் மாடல் பெல்லா ஹடித்

என் தொழில் வாழ்க்கை முடங்கிப் போனாலும், பாலஸ்தீனத்திற்கான எனது ஆதரவை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன். மாடலிங் வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்று நான் பயப்படவில்லை. பாலஸ்தீனத்திற்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

பணத்திற்காக எங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜகவிடம் பதுங்கியுள்ளனர். அவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இதற்கு எதிரான ஜனநாயக போராட்டம் தீவிரமடையும். பாஜக பக்கம் சென்றுள்ள எம்.பி.,க்களுக்கு துணிச்சல் இருந்தால், ‘ஒய்-பிரிவு’ பாதுகாப்பு இல்லாமல் தங்களது தொகுதிகளுக்குச் சென்று பொதுமக்களைச் சந்திக்க முடியுமா?

ஜாமியா ஊடகம்

பீகார் பொதுச் சேவை ஆணையம் சமீபத்தில் நடத்திய தட்டச்சர் தேர்வில், பிரதமர் மோடி 2026 மார்ச் மாதம் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவை நேரடியாகக் குறிப்பிட்டு ஒரு கேள்வியைக் கேட்டுள்ளது. நடப்பு நிகழ்வுகள் தேர்வுகளில் தனிநபர் சார்ந்த கேள்விகள் அதிகரித்து வருவதன் அறிகுறியை இது வெளிப்படுத்துகிறது. இது அபாயகரமானது.

காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட்

பாஜகவிற்கு அதிகாரத்தின் மீது அளவுக்கு மீறிய பசி இருக்கிறது. அதனால் தான் அரசியலமைப்பை சீர்குலைக்கவும், அரசு நிறுவனங்களையும் புலனாய்வு முகமைகளையும் அவர்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஒரு பெரிய கட்சியையே சுக்குநூறாக நொறுக்கி எம்.பி.,க்களை விலைக்கு வாங்கும் பயங்கரமான சூழ்நிலையை உருவாக்கவும் பாஜக துணிந்துவிட்டது. தற்போது நாட்டின் ஜனநாயகம் மோசமான நிலையை நோக்கி செயல்பட்டு வருகிறது.

Share
FacebookXWhatsAppTelegram