விளையாடு
7 Jul 2026, 10:47 pm

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா டிரம்ப்பின் சதி தகர்ந்தது அமெரிக்காவைப் புரட்டியெடுத்த பெல்ஜியம்

23ஆவது சீசன் உலகக் கோப்பை கால்பந்து தொடர் வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 6ஆவது நாக் அவுட்- 16 சுற்று ஆட்டத்தில் தொடரை நடத்தும் அமெரிக்கா - பெல்ஜியம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே பெல்ஜியம் தாக்குதல் பாணி ஆட்டத்தை கையிலெடுத்தது. இதன் பலனாக ஆட்டத்தின் 9ஆவது நிமி டத்தில் பெல்ஜியம் அணியின் நட்சத்திர வீரர் கேட்லரே கோலடித்தார். 31ஆவது நிமிடத்தில் அமெரிக்கா பதிலுக்கு (தில்மான்) கோலடித்தது. இது பெனால்டி பாக்சிற்கு வெளியே அடிக்கப்பட்ட அற்புதமான கோலாகும். ஆனால் அமெரிக்காவின் இந்த கோல் கொண்டாட்டம் 2 நிமிடம் கூட நீடிக்கவில்லை. 33ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் கேட்லரே மீண்டும் ஒரு கோலடித்தார். இதன் மூலம் முதல் பாதியில் பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியிலும் பெல்ஜி யம் அணியின் கை ஓங்கியது. 57 ஆவது நிமிடத்தில் அந்த அணியின் வனக்கேன் கோலடித்தார். தொடர்ந்து ஆட்டநேர உதிரி நிமிடத்தில் (90+3’) பெல்ஜியம் அணியின் நட்சத்திர வீரர் லூகாகு கோலடித்தார். இறுதியில் பெல்ஜியம் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை புரட்டி யெடுத்து, காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

பிபா - டிரம்ப் சதி

ஜூலை 2 அன்று நடைபெற்ற நாக் அவுட் - 32 சுற்று ஆட்டத்தில் அமெரிக்கா - போஸ்னியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அமெரிக்கா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அமெரிக்க வீரர் போலரின் பலோகுன் செய்த பவுலுக்காக அவருக்கு நேரடியாக ரெட் கார்டு வழங்கப்பட்டது. சர்வதேச கால்பந்து சம்மேளன விதிகளின்படி, ரெட் கார்டு பெற்ற வீரர் அடுத்த போட்டியில் (பெல்ஜியத்திற்கு எதிரான ‘ரவுண்ட் ஆப் 16’ போட்டி) விளையாடத் தடை விதிக்கப்பட வேண்டும். ஆனால் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) தலைவர் ஜியானி இன்பான்டினோவை நேரடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பலோகுனின் தடையை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, பிபா தனது ஒழுங்குமுறை விதியின் பிரிவு 27-ஐப் (Article 27) பயன்படுத்தி, பலோகுனின் ஒரு போட்டித் தடையை 1 ஆண்டு காலத்திற்கு ஒத்திவைப்பதாக சர்ச்சைக்குரிய அறிவிப்பை பிபா வெளியிட்டது. அவரது ரெட் கார்டு ரத்து செய்யப்பட்டது. இதனால் பலோகுன் பெல்ஜியத்திற்கு நாக்-அவுட் போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளார். உலகக்கோப்பை வரலாற்றில் இப்படி நடப்பது மிக மிக அரிதான ஒன்று. எனினும் டிரம்பின் இந்த சதி விளையாட்டு நாக் அவுட் - 16 ஆட்டத்தில் எடுபடவில்லை. பலோகுன் கோலும் அடிக்கவில்லை. அமெரிக்காவை ஐரோப்பா அணியான பெல்ஜியம் புரட்டியெடுத்துவிட்டது.

கடைசி நேர கோலால் போர்ச்சுக்கலை வீழ்த்தி ஸ்பெயின் திரீல் வெற்றி

நாக் அவுட் - 16 சுற்றின் 5 ஆவது ஆட்டத்தில் ஸ்பெயின் - போர்ச்சுக்கல் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் பெரும் பாலான பகுதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. அதிரடி ஷாட், அமர்க்களமான தடுத்தல் என ஆட்டம் சுவாரஸ்யமாக நகர்ந்தா லும், ஆட்டத்தின் 90 நிமிடங்களும் தடுப்பாட்டத்திலேயே நகர்ந்தன. இதனால் இந்த ஆட்டம் கூடுதல் நேரத்தை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்ட நேர உதிரி நிமிடத்தில் (90+1’) ஸ்பெயின் அணியின் நடுகள வீரர் மைகெல் மெரினோ, போர்ச்சுக்கலின் பின்கள சுவரை சாதுரியமாக தகர்த்து அபாரமான கோல் ஒன்றை அடித்தார். இந்த ஒற்றைக் கோல் ஆட்டத்தின் வெற்றிக் கோலாக அமைந்தது. இறுதியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. ஜூலை 11 அன்று நடைபெறும் 2ஆவது காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி, பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது.

நேற்று நெய்மர்... இன்று ரொனால்டோ கண்ணீர் கடலில் கால்பந்து உலகம்

கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒரு வரான 41 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு (போர்ச்சுக்கல் கேப்டன்) இதுவே கடைசி உலகக் கோப்பை தொடராகும். போட்டிக்கு முன்பே ஓய்வு குறித்து (உலகக் கோப்பையில் மட்டும்) அறிவித்து விட்டு தான் ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். ஆனால் போர்ச்சுக்கல் அணி அதிர்ச்சி தோல்வியுடன் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. போட்டி முடிந்ததும் அமெரிக்காவின் டல்லாஸ் மைதானத்தில் இருந்த ரசிகர்களை நோக்கி கைதட்டிய ரொனால்டோ, கண்கலங்கியபடி மைதானத்தை விட்டு வெளியேறி னார். தொடர்ந்து போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரொனால்டோ, “இப்படி உலகக் கோப்பையை விட்டு வெளியேறுவது வேதனையாக இருக்கிறது. ஆனால் நான் என்னால் முடிந்த அனைத்தை யும் செய்துள்ளேன். எனது மனசாட்சி சுத்தமாக இருக்கிறது. இதுவே ஒரு கால்பந்து வீரரின் வாழ்க்கை. இது எனது கடைசி உலகக்கோப்பை என்பது உண்மை. ஆனால் தேசிய அணியில் தொடர்ந்து விளையாடுவது குறித்து இப்போது எதையும் சொல்ல விரும்பவில்லை. குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு, அமைதியாக யோசித்த பிறகே முடிவு எடுப்பேன்” என்று கண்ணீருடன் தெரிவித்தார். இரட்டைச் சாதனை உலகக்கோப்பையில் ரொனால்டோவின் சிறந்த சாதனை 2006ஆம் ஆண்டு அரையிறுதி வரை முன்னேறியதுதான். இந்தத் தொட ரில் அவர் மூன்று கோல்கள் அடித்தார். மேலும், உலகக்கோப்பை வர லாற்றில் ஆறு வெவ்வேறு தொடர் களில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் தக்க வைத்துள் ளார். மொத்தமாக 11 உலகக் கோப்பை கோல்களுடன் அவர் சாதனைப் பட்டியலில் இணைந்த ஒன்பதாவது இடத்தில் உள்ளார். நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் உஸ்பெகிஸ் தான் அணிக்கு எதிராக இரண்டு கோல்களை அடித்ததன் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் 41 வயது 138 நாட்களில் இரண்டு கோல்கள் அடித்த மிக வயதான வீரர் என்ற சாத னையைப் படைத்தார். மேலும், அதே தொடரில் குரோசியாவிற்கு எதிராக அவர் அடித்த பெனால்டி கோல், உல கக்கோப்பை நாக்-அவுட் வரலாற்றில் மிக வயதான கோல் அடித்த வீரர் என்ற இரட்டை சாதனையுடன் ரொனால்டோ ஓய்வு பெற்றார். சர்வதேச கால்பந்தில் 146 கோல்களுடன் அதிக கோல்கள் அடித்த வீரராகவும், 233 போட்டிகளில் விளையாடிய வீரராகவும் சாதனை படைத்துள்ள ரொனால்டோ, போர்ச்சுகலுக்காக 2016 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டத்தையும், இரண்டு முறை யுஇஎப்ஏ நேஷன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார். இருப்பினும் உல கக்கோப்பை பட்டம் மட்டும் அவருக்கு எட்டாத கனவாகவே இருந்து வந்தது. தற்போது அது பொய்த்து போய் விட்டது. கண்ணீர் தற்போதைய கால்பந்து உலகில் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் ஆகிய மூவருக்கும் அதிகளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இத்த கைய சூழலில், 48 மணிநேரத்தில் நெய்மர், ரொனால்டோ என இரு வரும் அடுத்தடுத்து ஓய்வு பெற்றதால் (உலகக்கோப்பையில் மட்டும்) கால்பந்து உலகமே கண்ணீர் கடலில் மிதந்து வருகிறது.கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒரு வரான 41 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு (போர்ச்சுக்கல் கேப்டன்) இதுவே கடைசி உலகக் கோப்பை தொடராகும். போட்டிக்கு முன்பே ஓய்வு குறித்து (உலகக் கோப்பையில் மட்டும்) அறிவித்து விட்டு தான் ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். ஆனால் போர்ச்சுக்கல் அணி அதிர்ச்சி தோல்வியுடன் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. போட்டி முடிந்ததும் அமெரிக்காவின் டல்லாஸ் மைதானத்தில் இருந்த ரசிகர்களை நோக்கி கைதட்டிய ரொனால்டோ, கண்கலங்கியபடி மைதானத்தை விட்டு வெளியேறி னார். தொடர்ந்து போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரொனால்டோ, “இப்படி உலகக் கோப்பையை விட்டு வெளியேறுவது வேதனையாக இருக்கிறது. ஆனால் நான் என்னால் முடிந்த அனைத்தை யும் செய்துள்ளேன். எனது மனசாட்சி சுத்தமாக இருக்கிறது. இதுவே ஒரு கால்பந்து வீரரின் வாழ்க்கை. இது எனது கடைசி உலகக்கோப்பை என்பது உண்மை. ஆனால் தேசிய அணியில் தொடர்ந்து விளையாடுவது குறித்து இப்போது எதையும் சொல்ல விரும்பவில்லை. குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு, அமைதியாக யோசித்த பிறகே முடிவு எடுப்பேன்” என்று கண்ணீருடன் தெரிவித்தார். இரட்டைச் சாதனை உலகக்கோப்பையில் ரொனால்டோவின் சிறந்த சாதனை 2006ஆம் ஆண்டு அரையிறுதி வரை முன்னேறியதுதான். இந்தத் தொட ரில் அவர் மூன்று கோல்கள் அடித்தார். மேலும், உலகக்கோப்பை வர லாற்றில் ஆறு வெவ்வேறு தொடர் களில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் தக்க வைத்துள் ளார். மொத்தமாக 11 உலகக் கோப்பை கோல்களுடன் அவர் சாதனைப் பட்டியலில் இணைந்த ஒன்பதாவது இடத்தில் உள்ளார். நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் உஸ்பெகிஸ் தான் அணிக்கு எதிராக இரண்டு கோல்களை அடித்ததன் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் 41 வயது 138 நாட்களில் இரண்டு கோல்கள் அடித்த மிக வயதான வீரர் என்ற சாத னையைப் படைத்தார். மேலும், அதே தொடரில் குரோசியாவிற்கு எதிராக அவர் அடித்த பெனால்டி கோல், உல கக்கோப்பை நாக்-அவுட் வரலாற்றில் மிக வயதான கோல் அடித்த வீரர் என்ற இரட்டை சாதனையுடன் ரொனால்டோ ஓய்வு பெற்றார். சர்வதேச கால்பந்தில் 146 கோல்களுடன் அதிக கோல்கள் அடித்த வீரராகவும், 233 போட்டிகளில் விளையாடிய வீரராகவும் சாதனை படைத்துள்ள ரொனால்டோ, போர்ச்சுகலுக்காக 2016 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டத்தையும், இரண்டு முறை யுஇஎப்ஏ நேஷன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார். இருப்பினும் உல கக்கோப்பை பட்டம் மட்டும் அவருக்கு எட்டாத கனவாகவே இருந்து வந்தது. தற்போது அது பொய்த்து போய் விட்டது. கண்ணீர் தற்போதைய கால்பந்து உலகில் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் ஆகிய மூவருக்கும் அதிகளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இத்த கைய சூழலில், 48 மணிநேரத்தில் நெய்மர், ரொனால்டோ என இரு வரும் அடுத்தடுத்து ஓய்வு பெற்றதால் (உலகக்கோப்பையில் மட்டும்) கால்பந்து உலகமே கண்ணீர் கடலில் மிதந்து வருகிறது.