தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கே.ஏ.செங்கோட்டையன் நேர்மை எனும் முகமூடிக்குப் பின்னால்!

29 Nov 2025, 4:58 pm
கே.ஏ.செங்கோட்டையன்  நேர்மை எனும் முகமூடிக்குப் பின்னால்!
<p><strong>கே.ஏ.செங்கோட்டையன் &nbsp;நேர்மை எனும் முகமூடிக்குப் பின்னால்!</strong></p> <p>தமிழக வெற்றிக் கழகத்தில் கே.ஏ. செங்கோட்டையன் அண்மையில் இணைந்திருக்கும் சூழலில், பல ஊடகங் கள் அவரை &lsquo;அமைதியானவர்&rsquo;, &lsquo;நேர்மை யான மனிதர்&rsquo; என்று வர்ணித்து வருகின்றன. &nbsp;எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் &nbsp;போன்றோரின் மீதான ஊழல் வழக்கு களைக் குறிப்பிட்டு, செங்கோட்டையன் குற்றச்சாட்டுகள் அற்றவர் எனக் கூறுவது &nbsp;எந்த அளவுக்கு உண்மை என்பதை இவ ரது நீண்ட அரசியல் பயணத்தின் வர லாற்றுத் தரவுகளின் அடிப்படையில் ஆராய் வது அவசியம். போக்குவரத்து ஊழல்: &nbsp;நீதித்துறையின் கடுமையான தீர்ப்பு எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் பய ணித்து, பின்னர் 1991-96 அதிமுக ஆட்சி யில் போக்குவரத்துத் துறை அமைச்ச ராக செங்கோட்டையன் பணியாற்றினார். இங்கிருந்துதான் அவரது உண்மை முகம் வெளிப்படத் தொடங்கியது. போக்கு வரத்துக் கழகங்களுக்கு உதிரி பாகங்கள் வாங்கியது மற்றும் டிக்கெட் அச்சடித்தது போன்ற விவகாரங்களில் ரூ. 2.6 கோடி ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, ஜீவா போக்குவரத்துக் கழகத்தில் &nbsp;ரூ. 12 கோடி ஊழல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, 98 சாட்சி களின் அடிப்படையில், 2000ஆம் ஆண்டு செங்கோட்டையன் &lsquo;குற்றவாளி&rsquo; எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அவருக்கு நான்கு ஆண்டு காலம் தேர்தலில் போட்டி யிடத் தடை, கடுங்காவல் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்பட்டது. நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித் தன் தனது தீர்ப்பில், &ldquo;குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஊழல் பேய்க்கு செங் கோட்டையன் அடிமையாகிவிட்டார்&rdquo; எனக் &nbsp;கடுமையாகச் சாடினார். உயர் பதவியில் &nbsp;உள்ளவர்களின் இதுபோன்ற தவறுகள் &nbsp;நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத் தையே சீர்குலைக்கும் என்றும் எச்சரித்தார். அரசியல் செல்வாக்கால் மறைக்கப்பட்ட நீதி நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்ப ளித்த பிறகும், 2001இல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் செங்கோட் டையன் மீண்டும் அமைச்சரானார். ஆச்ச ரியப்படும் விதமாக, 2002இல் போதிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்ற &lsquo;நற்சான்றுடன்&rsquo; ஊழல் வழக்கு ரத்து &nbsp;செய்யப்பட்டது. நீதிமன்றத்தால் குற்ற வாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவர், வெறும் அரசியல் செல்வாக்கினால் விடு விக்கப்படுவது நீதியாகாது. மேலும், ஜெயலலிதாவின் பிறந்தநாள் பரிசுகள் தொடர்பான கருவூலச் சூறையாடல் வழக்கி லும் செங்கோட்டையன் குற்றவாளி யாகச் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், காலதாமதம் மற்றும் முக்கியக் குற்ற வாளிகளின் மரணம் காரணமாக இந்த வழக்கிலிருந்தும் அவர் தப்பினார். வாச்சாத்தி அட்டூழியம்: அமைச்சரின் மறுப்பும் நீதியின் வெற்றியும் தமிழக வரலாற்றின் கரும்புள்ளி என &nbsp;அறியப்படும் வாச்சாத்தி பாலியல் வன் கொடுமை வழக்கு 1992இல் நடந்தபோது, &nbsp;செங்கோட்டையன் வனத்துறைக்கும் அமைச்சராகப் பதவி வகித்தார். சந்தனக் &nbsp;கட்டை கடத்தல் குற்றச்சாட்டில், 155 வனத்துறையினர், 108 காவல்துறை உட்பட அரசு அதிகாரிகள் வாச்சாத்தி கிராமத் திற்குள் புகுந்து, பழங்குடி மக்களின் உடைமைகளைச் சூறையாடி, பல பெண் களை பாலியல் வன்கொடுமை செய்த னர். இந்த அட்டூழியங்கள் வெளிவந்த போது, அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து, கம்யூ னிஸ்ட் கட்சியினர் சொல்வது வெறும் கட்டுக் கதை என்று அப்பட்டமாக மறுத்தார். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) மேற்கொண்ட 25 &nbsp;ஆண்டுகளுக்கும் மேலான போராட்டத் தின் விளைவாக, செங்கோட்டையனால் &lsquo;நற்சான்று&rsquo; வழங்கப்பட்ட 215 அதிகாரி களும் குற்றவாளிகள் எனத் தண்டனை பெற்றனர். இது சிபிஎம் இயக்கத்தின் வரலாற்று வெற்றியாகும். அரசியல் நகர்வும் உண்மை ஒளியும் செங்கோட்டையன் போன்ற நபர்கள் ஒரு புதிய கட்சியில் இணைவது, அதிமுக வின் வாக்கு வங்கியை பாஜகவிற்கு மாற்றும் ஒரு அரசியல் சதுரங்க ஆட்டத்தின் &nbsp;ஒரு பகுதியே என்று சிபிஎம், விசிக உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் எச்சரிக்கின்றனர். நீதிமன்றம் குற்ற வாளி எனத் தீர்ப்பளித்த ஒருவரை, மனித &nbsp;உரிமை மீறல்களில் பங்கு வகித்த ஒரு வரை, நேர்மையானவர் என ஊடகங்கள் வர்ணிப்பது பத்திரிகை அறத்திற்கு எதிரானது. உண்மை எப்போதும் வெளிப் படும்; செங்கோட்டையனின் கடந்த கால &nbsp;வரலாறு அவரைப் பின்தொடரும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.