ஜூலை 25, 26 திருச்சியில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளன மாநில மாநாடு வரவேற்புக் குழு அமைப்பு
21 Jun 2026, 11:06 pm
<p>ஜூலை 25, 26 திருச்சியில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளன மாநில மாநாடு வரவேற்புக் குழு அமைப்பு</p><p>திருச்சிராப்பள்ளி, ஜூன் 21 - இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ்நாடு 14 ஆவது மாநில மாநாடு திருச்சியில் ஜூலை 25, 26 ஆகிய தேதி களில் நடைபெறுகிறது. அதன் வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் திருச்சியில் ஹோட்டல் ஆனந்த்-இல் ஞாயிறன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் சுனில்குமார், பொதுச் செய லாளர் ரவிக்குமார், அகில இந்திய செயலாளர் ஹரிராவ், அகில இந்திய இணைச் செயலாளர் அஸ்வத், மாநிலச் செய லாளர் சர்வேசன், மாவட்டச் செயலாளர் மனோகர் மற்றும் உறுப்பு சங்கங்களின் பொறுப்பாளர்கள், முன்னாள் பொறுப்பாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். வரவேற்பு குழு தலைவராக பெல் சிஐடியு தலைவர் ஸ்ரீதர், செயலாளராக ஹேமன்குமார், பொருளா ளராக ரகுராமன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.</p>
