முந்தய பக்கம்

ஆவின் பால்கோவா-வில் வண்டு!

31 Oct 2026, 11:47 pm
ஆவின் பால்கோவா-வில் வண்டு!

ஆவின் பால்கோவா-வில் வண்டு!

உதகை, அக்.31-உதகை கமர்சியல் சாலையில் செயல்பட்டு வரும் ஆவின் பால் விற்பனை அங்காடியில் வாங்கிய பால் மற்றும் பால்கோவா உள்ளிட்ட பொருட்களில் வண்டு இருந்ததால் வாடிக்கையாளர் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

உதகை கமர்சியல் சாலையில் உள்ள ஆவின் பாலகத்தில் உள்ளூர் பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் பால் மற்றும் பால்கோவா உள்ளிட்ட பொருட்களை வாங்கியுள்ளார். பின்னர், பாலகத்திலேயே பால்கோவா பாக்கெட்டை திறந்து பார்த்தபோதுஅதில் வண்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.இதுகுறித்து அங்கிருந்த விற்பனையாளரிடம் தெரிவித்தும் உரிய பதில்கிடைக்காததால், உதகை ஆவின் பொது மேலாளரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவின் அதிகாரிகள், பால்கோவாவை சோதனை செய்யாமல் வாடிக்கையாளரை மிரட்டியதாக வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஆவின் நிர்வாகம் உணவுப் பொருட்களின் தரம் குறித்து அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். உள்ளூர் மக்கள் நாள்தோறும் ஆவின் பொருட்களை பயன்படுத்தி வரும் நிலையில், உதகையில் உள்ள ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram