பீரகுப்பத்தில் அருந்ததி குடியிருப்பில் தவிச கொடியேற்றுவிழா
11 May 2026, 1:36 am
<p><strong>பீரகுப்பத்தில் அருந்ததி குடியிருப்பில் தவிச கொடியேற்றுவிழா</strong></p><p>திருவள்ளூர், மே 10- திருத்தணி ஒன்றியம், பீரகுப்பம் அருந்ததி குடியிருப்பு பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பெயர் பலகை மற்றும் சங்க கொடியேற்றுவிழா நடைபெற்றது. திருத்தணி அருகில் உள்ள பீர குப்பத்தில் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் புதிய கிளை திறப்பு விழா சனிக்கிழமையன்று (மே 9), நடை பெற்றுள்ளது. இதற்கு கிளை தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் சுப்பிரமணியம்மாள் வர வேற்றார். பொருளாளர் சிவகாமி, துணைத் தலைவர்கள் கோபி, காயத்ரி, ஜோதி துணை செயலாளர்கள் சங்கீதா, சவுந்தர்யா, நவீன் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.சம்பத் பெயர் பலகை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் மூத்த உறுப்பினர் சி.பெருமாள் சங்க கொடியேற்றினார். ஒன்றிய தலைவர் அப்சல் அகமத், செய லாளர் ஸ்ரீநாத், பொருளாளர் நேதாஜி மற்றும் தமுஎகச மாவட்ட தலைவர் தேசன், மலைவாழ் மக்கள் சங்க ஒன்றிய தலைவர் பார்த்திபன், செயலாளர் செல்வி, நிர்வாகிகள் கோவிந்தசாமி, லதா, சங்கத்தின் பொருளாளர் சிவகாமி, துணைத் தலைவர்கள் கோபி, காயத்ரி, ஜோதி துணை செயலாளர்கள் சங்கீதா, சவுந்தர்யா, நவீன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் வி.அந்தோணி ஆகியோர் பங்கேற்றனர்.</p>
