கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
14 Dec 2025, 3:45 pm

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சேலம், டிச.14- எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 30 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் மாவட்டம், எடப்பாடி அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில். கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை பயின்ற மாணவர்கள் சுமார் 30 ஆண்டுக ளுக்குப் பிறகு எடப்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற் றது. முன்னதாக. பேருந்து நிலையம் அருகிலிருந்து முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக மண்டபத்தை வந்தடைந்தனர். பின்னர் அனைவரும் ஒருவருக்கொருவர் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

ஆவின் வளாகத்திற்குள் நுழைந்த கரடி

உதகை, டிச.14- உதகை ஆவின் வளாகத்திற்குள் நுழைந்த கரடி, பாலை அருந்தியதுடன், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்திச் சென்றுள்ளது. உதகை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது. குடியிருப்பு கள், தேயிலைத் தோட்டங்களில் சுற்றி திரியும் கரடிகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் ஆய்வு மேற் கொண்டு கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று விடுவித்தாலும், மீண்டும் அடுத்தடுத்து குடியிருப்பு களில் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருவது வாடிக்கை யாக உள்ளது. இந்நிலையில், சனியன்று இரவு உதகை ஆவின் நிறுவன பால் உற்பத்தி செய்யும் வளாகத்திற்குள் கரடி ஒன்று நுழைந்தது. அப்போது, உற்பத்திக்காக கேன்களில் வைக்கப்பட்ட பாலை அருந்தியதுடன், கேன்களை தள்ளி சேதப்படுத்தியது. இச்சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து வளாகத்தில் ஆவின் நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

பயணக்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல்

ஈரோடு, டிச.14- சோலார் பகுதியுடன் நிற்கும் பேருந்து பயணக்கட்டணத்தை குறைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரி சலைக் குறைக்கும் வகையில், சோலார் என்ற பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, கடந்த டிச.2 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத் தார். அதைத்தொடர்ந்து கரூர் மார்க்கமா கச் செல்லும் வாகனங்கள் மற்றும் பழனி செல்லும் வாகனங்கள், இப்பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். வெளியி லிருந்து வரும் பயணிகள் நகரப் பேருந்து கள் மூலம் மாநகருக்குள் வந்து செல்ல லாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி, கரூர் வழியாக செல்லும் பேருந்து களை அங்கு சென்று தான் பிடிக்க முடி யும். ஆனால், தனியார் பேருந்துகள் சோலார் பேருந்து நிலையத்தைக் கடந்து மாநகருக்குள் இருக்கும் பேருந்து நிலை யத்திற்கு வந்து செல்கிறது. முன்னதாக, அமைச்சர் சு.முத்துசாமி புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வரும்போது, சில பிரச்சனைகள் வரும்; அதற்கு தீர்வு காணப்படும் எனத் தெரிவித்திருந் தார். அதுபோல இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என நம்புவோம். அதேசமயம் கரூர் - ஈரோடு கட்டண மாக ரூ.47 வசூலிக்கப்பட்டு வந்தது. சோலார் ஒரு ஸ்டேஜ் ஆக இருந்தது. தற்போது சோலாருடன் பேருந்து நின்று விடும்போது, பேருந்து பயணக்கட்டணம் குறைக்கப்பட வேண்டும். ஆனால், அதே கட்டணத்தை வசூலிப்பதாக பயணி கள் புகார் தெரிவித்தனர். மேலும் அங்கி ருந்து நகரப்பகுதிக்கு வர ஆட்டோ கட்ட ணம் அல்லது நகர பேருந்தில் ரூ.10 வரை கூடுதலாகக் கொடுக்க வேண்டியுள்ளது என்ற புகார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள் ளனர்.

படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உதகை, டிச.14- விடுமுறை தினமான ஞாயிறன்று பைக்காரா படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்த னர். ‘மலைகளின் அரசி’ என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம், உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றுள்ள மாவட்டமாகும். இங்கு நாள்தோறும் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகையிலுள்ள தொட்ட பெட்டா மலை சிகரம், அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்து செல்கின்ற னர். இந்நிலையில், வார விடுமுறை நாளான ஞாயி றன்று, உதகை – கூடலூர் தேசிய நெடுஞ்சாலை யில் முக்கூர்த்தி தேசிய பூங்கா மலைத்தொடரில் அமைந்துள்ள பைக்காரா படகு இல்லத்தில் சுற்று லாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இங்கு இயக்கப்படும் அதிவிரைவு படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்து அணையின் அழகிய காட்சியையும், மலைத்தொடர்களையும், இயற்கை காட்சிகளையும் கண்டு ரசித்தனர்.

மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை: 3 பேர் கைது

சேலம், டிச.14- அயோத்தியாப்பட்டணம் அருகே மூதாட்டியை கொலை செய்து, நகை திருடிய வழக்கில் 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள பூசாரிப்பட்டி கிராமத்தில் கடந்த செப்.29 ஆம் தேதி உண்ணாமலையை (75) என்பவரை அடை யாளம் தெரியாத நபர்கள் கொலை செய்துவிட்டு, அவ ரிடமிருந்த 3 பவுன் தங்க நகைகளை கொள்ளைய டித்துச் சென்றனர். இதுகுறித்து ஆதாயத்திற்காக கொலை செய்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காரிப்பட்டி போலீசார், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர் களை தேடி வந்தனர். இவ்வழக்கில் சேலம் பெரிய புத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (37), இளையரா மன் (55), பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பசப் பலூரைச் சேர்ந்த ரஞ்சித் (27) ஆகிய 3 பேரை காரிப் பட்டி போலீசார் வெள்ளியன்று இரவு கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் நடைபெற்ற விசாரணை யில், வெவ்வேறு குற்ற வழக்குகளில் கைது செய் யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, இவர்கள் 3 பேரும் நண்பர்களாகி ஜாமீனில் வெளியே வந்ததும் கூட்டுசேர்ந்து, காரிப்பட்டி பகுதி யில் பல்வேறு இடங்களில் திருடியது தெரியவந்தது. இதையடுத்து 9 பவுன் தங்க நகைகளை போலீசார் பறி முதல் செய்து, தொடந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெடிபொருள் கிடங்கு உரிமையாளர் கைது

தருமபுரி, டிச.14- கடத்தூர் பகுதியில் விதிமுறைகளை மீறி வெடி பொருட்களை விற்பனை செய்தவரை காவல் துறையி னர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், கடத்தூர் பகுதியில் விதி களை மீறி வெடிபொருள் கிடங்கு செயல்பட்டு வருவ தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், கடத்தூர் காவல் ஆய்லாளர் வசந்தா தலைமை யிலான போலீசார், அப்பகுதியிலுள்ள சவுந்தர்ரா ஜன் (69) என்பவருக்கு சொந்தமான வெடிபொருள் கிடங்கில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, விதிகளை மீறி பெயர், விலாசம் உள்ளிட்ட விவரங் களை முறையாக பதிவு செய்யாமல், லாப நோக்கத் தோடு, பலருக்கு வெடி மருந்துகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, செப்.6 முதல் 16 ஆம் தேதி வரை, அதிகளவில் விற்பனை செய்தது தெரியவந்தது. மொத்தம் 50 கிலோ வெடி மருந்து, எலக்ட்ரிக் டெட்டனேட்டர் 10, 750 மீட்டர் ஒயர் உள்ளிட்டவை விதிமுறைக்குப் புறம்பாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குடோன் உரிமையாளர் சவுந்தர்ராஜனை போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

பாலியல் தொல்லை: முதியவருக்கு 14 ஆண்டுகள் சிறை

திருப்பூர், டிச.14- 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொடர்புடைய குற்றவா ளிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. திருப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய (தெற்கு) எல்லைக்குட்பட்ட பகுதி யில், கடந்த ஆண்டு ஜன.5 ஆம் தேதி 2 சிறுமி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக் கில் பிரேம்குமார் (65) என்பவரை போலீ சார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். இதையடுத்து குற்றம் சாட் டப்பட்டவர் மீது இறுதி அறிக்கை தாக் கல் செய்து அரசு தரப்பு சாட்சிகளை நேர்நி றுத்தி நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணை முடித்த நிலை யில், வெள்ளியன்று திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி கோகிலா தீர்ப்பளித்தார். அதில் பிரேம்குமாருக்கு பாலியல் வழக் கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தர விட்டார். இவ்வழக்கில் அரசு வழக்குரைஞர் ஜமீலா பானு ஆஜராகினார்.

சிறையில் கைதி உயிரிழப்பு

கோவை, டிச.14- கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்தார். கோவை, பழைய சுங்கம் திருச்சி சாலை பகுதியைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவர், துடியலூர் அருகே நடந்த போக்சோ வழக்கில் கைதாகி, கடந்த ஜூன் மாதம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டதால், சிறையில் உள்ள மருத்து வமனையில் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். அதன் பிறகு அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதைத்தொடர்ந்து குன்னூரில் உள்ள அவரது உறவின ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் ஒப்படைக்கப்பட்டது.

சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

தருமபுரி, டிச.14- பாலக்கோடு அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கொம் மநாயக்கனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (35). தனியார் நிறுவன ஊழியரான இவர், சனியன்று பாலக் கோடு - தருமபுரி சாலையில், செல்லியம்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பழு தான வாகனத்தை ஏற்றிக்கொண்டு சென்ற மீட்பு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கிவீசப் பட்டு, படுகாயமடைந்த கோவிந்தராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து மதிகோன்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

ஆமை வேகத்தில் நடைபெறும் அந்நிய மரங்கள் அகற்றும் பணி!

உதகை, டிச.14- நீலகிரி வனப்பகுதிகளில் அந்நிய மரங்கள் அகற்றும் பணி மந்த கதியில் நடந்து வருவதை விரைப்படுத்த வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மாநிலம் முழுவதும் வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க, 2.60 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி வனத்துறை மூலம் நடைபெற்று வரு கிறது. மறுபுறம், 65 சதவீதம் வனம் சூழ்ந்த பகுதியான நீலகிரியில் உண் ணிச்செடி, கற்பூரம், சீகை உள்ளிட்ட அந் நிய மரம் அதிகரித்துள்ளதால், வன விலங்குகள் உட்பட தாவரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் நீலகிரியில் உள்ள கற்பூரம் உள்ளிட்ட அந்நிய மரங்களை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. நீலகிரி வனக்கோட்டம் சார்பில், உதகை, குந்தா, குன்னுார், கோத்தகிரி, கூட லூர், பந்தலூர், அவலாஞ்சி, அப்பர் பவானி, கோரகுந்தா உள்ளிட்ட பகுதிக ளில் பல ஏக்கர் பரப்பளவில் அந்நிய மரங்கள் அகற்றப்பட்டன. ஆனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் அகற்றும் பணி மந்த கதியில் நடந்து வருகிறது. குறிப்பாக, வென் லாக்டவுன் மலைப்பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் சீகை, கற்பூர மரங்கள் அகற்றப்படாமல் உள்ளது. மேலும், அந் நிய மரங்களை அகற்றிய இடங்களில் போதிய பராமரிப்புப் பணிகள் மேற் கொள்ளாததால், அந்த பகுதிகளில் மீண்டும் சீகை, கற்பூரம் மரங்கள் வேக மாக வளர்ந்து வருவதால் சுற்றுசூழல் வெகுவாக பாதிக்கப்படும் சூழல் ஏற் பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வன அலுவ லர் கவுதம் கூறுகையில், நீலகிரி வனக் கோட்டத்தில் அந்நிய மரங்கள் சுமார் 1500 ஏக்கர் அளவுக்கு அகற்றப்பட்டுள் ளது. இன்னும் பல ஏக்கர் அகற்றப்பட வுள்ளது. அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் மரங்கள் வளராத அளவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அவ்வப்போது பெய்த மழை காரண மாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள் வதில் இடையூறு ஏற்பட்டது. ஜனவரி மாதத்திலிருந்து வெயில் தென்படும் சமயங்களில் அந்நிய மரங்களை அகற் றிய இடங்களில் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும், என் றார்.