முந்தய பக்கம்

தேன்கூடு - மா.முத்துசாமி

27 Jun 2026, 9:00 pm
தேன்கூடு - மா.முத்துசாமி

தேன்கூடு - மா.முத்துசாமி

தொங்குது பார் தொங்குது பார் மரக்கிளையில் தொங்குது பார் பந்து போல தொங்குது பார் சந்தேகமில்லை தேன்கூடு தான்

வகை வகையாய் தேனுண்டு மலைத்தேன் அடுக்குத்தேன் கொசுத்தேன் கொம்புத்தேன் கோபுர உச்சியிலும் தேன்

மருந்துக்கு பயன்படும் மகத்தான தேனதனை எத்தனை வருடமானாலும் எத்துளியும் கெடுவதில்லையே

மருந்துக்கு பயன்படும் மகத்தான தேனதனை எத்தனை வருடமானாலும் எத்துளியும் கெடுவதில்லையே

வேலைக்கார தேனீக்கள் வீணாய் பொழுதை கழிப்பதில்லை பலநூறு மைல்களுக்கு அப்பால் பறந்து சென்று மலர் தேடி பாங்காய் சேகரித்த தேனையுமே பாதுகாப்பாய் சேர்ப்பது அதன் வேலை

கல் வீசி நாம் எறிந்தால் கூட்டமாய் படையெடுத்து கொட்டி தீர்த்து விடும் - நம்மை பறந்து வந்து பழி தீர்க்கும்

கூட்டு உழைப்பை நமக்குணர்த்தம் காட்டுப்பூச்சி தேனீக்கள் கற்றுத் தரும் நற்செய்தியை -நாம் கடைப்பிடிப்போம் எந்நாளுமே

Share
FacebookXWhatsAppTelegram