கிராக்கி
26 Mar 2026, 2:46 pm
<p><strong>கிராக்கி</strong></p>
<p>எல்<strong>.டி</strong>.எஃப் 3.0 என்று பெரும் ஊடகங்களே எழுதத்துவங்கியதால், கேரள முதல்வர் பினராயி விஜயனைப் பேட்டி எடுப்பதற்காக ஊடகவியலாளர்கள் குவிந்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் இருபது பேட்டிகள் வெளியாகியுள்ளன. தொலைக்காட்சிகள், செய்தித்தாள்கள், பிரபல யூடியூபர்கள் என்று எங்கு பார்த்தாலும் அவருடைய பேட்டிகளே இடம் பெற்றுள்ளன. கருத்துக் கணிப்புகளுக்கு முன்பாக காங்கிரசின் வி.டி.சதீஷன், பாஜகவின் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோரைச் சுற்றி வந்த ஊடகங்கள், தற்போது பினராயி விஜயனின் பேட்டிக்காகக் காத்திருக்கின்றன. எவ்வளவு சர்ச்சைக்குரிய வினாவாக இருந்தாலும், சளைக்காமல் பதில் சொல்கிறார். எதையாவது ஊதி விடலாமா என்று நினைத்து ஒருவர், நீங்கள் கட்சிக்குக் கட்டுப்பட்டவர்தானா என்று கேட்க, சிரித்துக் கொண்டே, யாருமே கட்சியை விட மேலானவர்கள் கிடையாது என்றார்.</p>
