அதிகாலை அழகே அழகு - மா.முத்துசாமி மு.வாடிப்பட்டி
31 Oct 2026, 9:51 pm

அதிகாலை அழகே அழகு - மா.முத்துசாமி மு.வாடிப்பட்டி

அதிகாலை அழகைப் பாருங்கள்

அற்புதம் நிகழ்வதைக் காணுங்கள்

சற்றே இன்னும் தூங்குகிறோம்-என

சத்தம் போடும் சிறார்களே

(அதிகாலை)

சேவல் கூவும் சத்தம்

செவியில் தேனாய் பாயுது

குயில்கள் கூவும் இசையில்

கும்மாளம் போடுது மயில்கள்

(அதிகாலை)

காக்கையுமதன் குஞ்சுகளும்

கரையும் சத்தம் கேட்டவுடன்

தூங்கும் நம் அனைவரையும்

தூரத்தில் இருந்தே எழுப்பிடுதே

(அதிகாலை )

வண்ண வண்ணச் சிட்டுகளும்

வகை வகையான பூச்சிகளும்

பச்சைக்கிளியும் மைனாவும்

பறந்து செல்லும் அழகை

பார்க்க பார்க்க கூசுதே

(அதிகாலை )

இயற்கை ஈந்த வண்ணங்களை

இரவு முழுதும் குழைத்து

வானவில்லைத் தோற்கடித்த

விடிகாலை அழகே அழகு

(அதிகாலை)

கிழக்கில் வானம் சிவந்ததை

கண்ணுற்றதனை நோக்கிடில்

வண்ணமயமான எதிர்காலம்

வந்து விடுகிறது நம் மனதில்

(அதிகாலை)