தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சொந்தக் கட்சிக்காரனையே போட்டு பொளக்கிறாயே லேட்டஸ்ட் 'அதிமுக மாடல்'

10 Apr 2026, 5:30 am
சொந்தக் கட்சிக்காரனையே போட்டு பொளக்கிறாயே லேட்டஸ்ட் 'அதிமுக மாடல்'

சொந்தக் கட்சிக்காரனையே போட்டு பொளக்கிறாயே லேட்டஸ்ட் 'அதிமுக மாடல்'

நகர நேரடித் தேர்தலை எதிர்க்கட்சிக்காரனை எதிர்க்கிற பழைய ஸ்டைல்; ஆனால், சொந்தக் கட்சிக்காரனையே போட்டுப் பொளக்கிறததுதான் லேட்டஸ்ட் 'அதிமுக மாடல்' போல! திருவொற்றியூர் தொகுதியில் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் குப்பன் மற்றும் அவரது மகன் கார்த்தி ஆகியோரது செயல்பாடுகள் அந்தத் தொகுதியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

வழக்கமாக எதிர்க் கட்சியினரை எதிர்த்து அரசியல் செய்வதை விட்டுவிட்டு, தற்போது தங்கள் சொந்தக் கட்சியினரையே 'கவனிக்கும்' புதிய பாணியை இவர்கள் கையில் எடுத்திருப்பது அந்தத் தொகுதிக்குள் பேச்சாக எழுந்துள்ளது. கடந்த காலங்களில் திமுக ஆதரவாளர் கானா மருத்துவமனையில் வைத்துத் தாக்கியதாக இவர்கள் மீது ஏற்கனவே ஒரு புகார் நிலுவையில் உள்ளது. அந்த வரிசையில் தற்போது தங்கள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன் என்பவரையே வேட்பாளர் தரப்பு தாக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர், "அதிமுக மற்றும் அதன் வரிசையில் அராஜகப் போக்கு ஒன்றும் புதியதல்ல. 2012-இல் அவர் வெற்றி பெற்ற பிறகு, அமைதியாக இருந்த மீனவக் கிராமங்கள் அனைத்தும் போர்க்களமாக மாறின. 2021-இல் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு தான் அங்கு மீண்டும் அமைதி திரும்பியுள்ளது" என்று காட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், அதிமுக வேட்பாளர் மீனவர் களின் நிலங்களை ஆக்கிரமித்துத் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது வருவதாகவும், அவர் மீண்டும் வெற்றி பெற்றால் அராஜகம் தலைதூக்கும் என்றும் கே.பி.சங்கர் எச்சரித்தார். அதிமுகவின் அராஜகத்தால் நொந்துபோயிருக்கும் அக்கட்சியினரே இந்த முறை 'அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்' சின்னத்திற்குத்தான் வாக்களிக்கப் போகிறார்கள் என்று நக்கலாகக் குறிப்பிட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.