கரடி நடமாட்டம்
9 Jul 2026, 10:15 pm
<p><strong>கரடி நடமாட்டம் </strong></p><p>உதகை, ஜூலை 9- ‘மலைகளின் அரசி’ என்றழைக்கப்படும் நீலகிரி, சுமார் 55 சதவிகிதம் வனப் பகுதியை கொண்ட மாவட்ட மாகும். இந்த வனப்பகுதிகள் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குக ளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது. அண்மை கால மாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியிலிருந்து வெளியேறும் கரடிகள், மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாகிவிட்டது. இந் நிலையில், கோத்தக்கிரி அருகே உள்ள பெப்பேன் குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியின் வீடியோ வைரலானதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ள னர்.</p>
