கடற்கரை முகத்துவாரம் தூர்வாரும் பணி துவக்கம்
12 Mar 2026, 4:20 pm
<p><strong>கடற்கரை முகத்துவாரம் தூர்வாரும் பணி துவக்கம்</strong></p>
<p>தஞ்சாவூர், மார்ச் 12- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா, சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கழுமங்குடா கடற்கரையில் முகத்துவாரம் தூர்வாரும் பணியை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் வியாழன் அன்று துவக்கி வைத்தார். கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் வகையில், தூர்ந்து போன வாய்க்கால்களை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது குறித்து பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடலோரக் கிராமங்களில் 10 இடங்களில், முகத்துவாரம் தூர்வாரும் பணி நடைபெற உள்ளது. அதன் முதற்கட்டமாக, கழுமங்குடா மீனவ கிராமத்தில் நடைபெற்ற தூர்வாரும் பணியை, சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் துவக்கி வைத்தார். துணை சுகாதார நிலையங்கள் ரெட்டவயல், மணக்காடு ஆகிய இரு இடங்களில், துணை சுகாதார நிலையங்களை சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் துவக்கி வைத்தார். நெபுலைசர் கருவி வழங்கல் ரெட்டவயல் அரசு துணை சுகாதார நிலையத்துக்கு, அன்னை அமராவதி அறக்கட்டளை சார்பில், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத் தலைவர் முனைவர் ஆ. ஜீவானந்தம், நெபுலைசர் கருவியை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு என நன்கொடையாக வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில், திமுக ஒன்றியச் செயலாளர் குழ.செ.அருள்நம்பி, வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.</p>
