பி.இ. 3ஆம் சுற்று கலந்தாய்வில்68,000 இடங்கள் ஒதுக்கீடு!
21 Aug 2026, 9:23 pm
<p><strong>பி.இ. 3ஆம் சுற்று கலந்தாய்வில்68,000 இடங்கள் ஒதுக்கீடு!</strong></p><p>சென்னை, ஆக. 21 -பொறியியல் படிப்புக்களில் மாணவர் சேர்க்கைக்கான 3-ஆம் சுற்று கலந்தாய்வில், 68 ஆயிரத்து 640 பேருக்கு (பொதுப்பிரிவு: 66,159; அரசுப்பள்ளி ஒதுக்கீடு: 2,481) தற்காலிக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் இதற்கான ஆணையை https://www.tneaonline.org/ தளத்தில் பதிவிறக்கலாம். மூன்று சுற்றுகள் முடிந்த நிலையிலும், இன்னும் 37 ஆயிரத்து 943 இடங்கள் காலியாக உள்ளதாக சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது.</p>
