பாஜக நியமன எம்பியான பிசிஐ தலைவர் மனன் மிஸ்ரா மாணவர்களிடம் மன்னிப்புக் கோரினார்
16 Aug 2026, 8:59 pm

பாஜக நியமன எம்பியான பிசிஐ தலைவர் மனன் மிஸ்ரா மாணவர்களிடம் மன்னிப்புக் கோரினார்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தின் 2026 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவிற்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டார். ஆனால், ‘இளைஞர்கள் - கரப் பான்பூச்சி’ கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 450 க்கும் மேற்பட்ட மாணவர்கள் துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்திடம், “தலைமை நீதிபதி சூர்யகாந்த் இந்தப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றால், பட்டம் வாங்காமல் புறக்கணிப்போம்” என்று மனு அளித்தனர்.

இதற்கிடையே, பார் கவுன்சில் ஆப் இந்தியாவின் (பிசிஐ) தலைவர் மனன் குமார் மிஸ்ரா, “நாட்டின் மிக உயரியநீதித்துறை பதவியை மாணவர்கள் அவமதித்துவிட்டனர். அதனால் நல்சார் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பைமுடிக்கும் எந்தவொரு மாணவரையும் வழக்கறிஞராகப் பதிவு செய்ய மாநில பார் கவுன்சில் அனுமதிக்கக் கூடாது” என்று உத்தரவிட்டார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால், அடுத்த சில மணிநேரங்களிலேயே தனது அறிவிப்பை மனன் குமார் மிஸ்ரா திரும்பப் பெற்றுக்கொண் டார். மனன் குமார் மிஸ்ராவின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வும் வெள்ளியன்று கடும் கண்டனம் தெரிவித்தது

இந்நிலையில், பாஜக நியமன எம்பியான மனன் குமார் மிஸ்ரா தனது உத்தரவுக்குப் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். இதுதொடர்பாக ஆகஸ்ட் 14 அன்று நள்ளிரவு வெளியிட்ட அறிக்கையில், “எனது அன்பான இளம் நண்பர் களுக்கு வணக்கம். எனது வார்த்தைகள் அல்லது உத்தரவு நமது சட்ட மாணவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியிருந்தால், அதற்காக நான் மனப்பூர்வமாக வருந்துகிறேன் மற்றும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீதித்துறை, பார் கவுன்சில், பல்கலைக்கழகங்கள்மற்றும் சட்ட மாணவர்களுக்கும் இடையேயான உறவு ஆழமானது, நிரந்தரமானது. மன்னிப்பு கேட்பது என்பது கௌரவமோ அல்லது அகம்பாவமோ சார்ந்தவிஷயம் அல்ல; நமது மாணவர்களின் உணர்வுகளும் கவலைகளும் முக்கியமானவை என்பதை எளிய முறையில் ஒப்புக்கொள் வதாகும்” என மனன் குமார்மிஸ்ரா மன் னிப்புக் கோரியுள்ளார்.