பிசிசிஐ ஆர்டிஐ கீழ் வராது என ஒற்றைத் தகவல் ஆணையர் அறிவிக்க முடியாது வெங்கடேஷ் நாயக் கடும் கண்டனம்
26 May 2026, 9:11 pm

பிசிசிஐ ஆர்டிஐ கீழ் வராது என ஒற்றைத் தகவல் ஆணையர் அறிவிக்க முடியாது வெங்கடேஷ் நாயக் கடும் கண்டனம்

புதுதில்லி உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப் பான ‘இந்திய கிரிக் கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ)’, தகவல் அறியும் உரி மைச் சட்டம் 2005இன் (ஆர்டிஐ) கீழ் பொதுமக்களுக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என மே 18 அன்று மத்திய தகவல் ஆணை யத்தின் ஒற்றை ஆணையர் தீர்ப்ப ளித்தார். இதன்மூலம் பிசிசிஐ அமைப்பு ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என 2018 ஆம் ஆண்டில், இதே மத்திய தகவல் ஆணையம் வழங்கி யிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு தற்பொழுது தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மைக்கு விழுந்த பலத்த அடி

மத்திய தகவல் ஆணை யத்தின் இந்த புதிய உத்தரவு குறித்து, தில்லியிலுள்ள காமன் வெல்த் மனித உரிமைகள் முன் முயற்சி அமைப்பின் இயக்குந ரும், பிசிசிஐயை வெளிப்படைத் தன்மை சட்டத்தின் கீழ் கொண்டு வர பல ஆண்டுகளாகப் போராடி வரும் ஆர்டிஐ ஆர்வலருமான வெங்கடேஷ் நாயக் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி யுள்ளார். இதுகுறித்து அவர் கூறு கையில்,“பல ஆண்டுகால சட்டப் போராட்டங்கள், குழுக்களின் பரிந்துரைகள், உச்சநீதிமன்றத்தின் பல முக்கியமான தீர்ப்புகள், அரசின் ஆலோசனைகள் என அனைத்தும் பிசிசிஐ அமைப்பில் கூடுதல் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றே ஆத ரித்தன. ஆனால், இந்த புதிய தீர்ப்பானது சட்டப்பூர்வ பொதுத் தகவல் வெளிப்பாட்டுக் கடமைகளி லிருந்து பிசிசிஐ-க்கு முழுமையா கப் பாதுகாப்பு அளிக்கும் வகை யில் அமைந்துள்ளது. இந்த முடி வின் நடைமுறை அடிப்படையை யும் கேள்வி எழுப்புகிறது. முந்தைய தகவல் ஆணையர் வழங்கிய ஒரு முக்கியத் தீர்ப்பை, தற்போதைய ஒற்றைத் தகவல் ஆணையர், அதைவிடப் பெரிய அமர்வுக்கு மாற்றாமல் எவ்வாறு தன்னிச்சையாக மாற்றியமைக்க முடியும்?” என அவர் கேள்வி எழுப்பி யுள்ளார்.

ரூ.18,760 கோடி சொத்து இந்திய

கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மொத்த சொத்து மதிப்பு தோராயமாக ரூ.18,760 கோடி (2.25 பில்லியன் அமெரிக்க டாலர்) என மதிப்பிடப்பட்டுள்ளது. மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கான அனைத்து நிதியையும் சேர்த்து பிசிசிஐ யின் தற்போதைய வங்கி இருப்பு மட்டும் ரூ.20,686 கோடி ஆக இருக்க லாம் என்று கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் (2019 முதல்) மட்டும் பிசிசிஐ தனது ரொக்க இருப்பில் ரூ.14,627 கோடியை கூடு தலாகச் சேர்த்துள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. ரூ.18,760 கோடி என்பது நம் நாட்டில் உள்ள இரண்டு சிறிய மாநிலங்க ளின் கருவூலத் தொகையை விட அதிகம் ஆகும். அதனால் தான் பிசிசிஐ-யில் என்ன நடக்கிறது? செலவு எப்படி? வருவாய் எப்படி? என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் அனைத்துத் தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் மோடி பிரதமர் ஆன பின்பு பிசிசிஐ வருமானம், செலவு மர்மமா கவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.