தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு உலகில் இந்தியாவைத் தனிமைப்படுத்தும் வகையில் பிசிசிஐ தலைவர் பேச்சு கைக்குலுக்குவது பாரம்பரியம் இல்லையாம்!

25 May 2026, 9:29 pm
விளையாட்டு உலகில் இந்தியாவைத் தனிமைப்படுத்தும் வகையில் பிசிசிஐ தலைவர் பேச்சு கைக்குலுக்குவது பாரம்பரியம் இல்லையாம்!

விளையாட்டு உலகில் இந்தியாவைத் தனிமைப்படுத்தும் வகையில் பிசிசிஐ தலைவர் பேச்சு கைக்குலுக்குவது பாரம்பரியம் இல்லையாம்!

புதுதில்லி ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் தேசிய விளையாட்டுப் பிரிவு ஆசி ரியர் சந்தீப் திவேதி ஒருங்கிணைப்பில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் மிதுன் மன்ஹாஸிடம் நேர் காணல் நடைபெற்றது.

இந்த நேர்காணலின் போது, இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு தொடரில் விளையாடி னால், இருநாட்டு வீரர்கள் கைகுலுக்குவதை இனி நாம் பார்க்க முடியுமா? என கேள்வி எழுப்பப் பட்டது.

இதற்கு பதில் அளித்த மன்ஹாஸ், “பாகிஸ்தானுடனான இருதரப்பு தொடர்கள் குறித்த எந்தவொரு முடிவும் இந்திய அரசின் கொள்கைக்கு உட்பட்டது என்பதை பிசிசிஐ எப்போதும் தொடர்ந்து கூறி வருகிறது.

அந்த நிலைப்பாட்டை நாங்கள் முழுமையாக மதிக்கி றோம்.

அதற்கு கட்டுப்படுகிறோம். எதிர்காலப் போட்டிகள் அனைத்தும் அன்றைய சூழ்நிலை யைப் பொறுத்தே அமையும்.

தற்போதைக்கு கைக் குலுக்குவது நடக்கும் என்று நான் நினைத்து பார்க்கவில்லை.

இருப்பினும் இது வீரர்களின் விருப்பம். அவர்கள் விரும்ப வில்லை என்றால், அதைச் செய்ய மாட்டார்கள்.

இந்தியர்களாகிய நமது பாரம்பரியம் நமஸ்தே (வணக்கம்) சொல்வதுதான்.

நாம் எப்போதும் கைகுலுக்கும் நாடாக இருந்ததில்லை” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

பாரம்பரியம் பார்க்க முடியாது மிதுன் மன்ஹாஸின் இந்த கருத்து விளை யாட்டு உலகில் இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும்.

காரணம் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு பாரம்பரியம் உள்ளது.

அமெ ரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் கட்டிய ணைத்தல், ஒரு சில ஐரோப்பா நாடுகளில் கன்னங்களை ஒட்டி கட்டியணைத்தல் உள்ளிட்ட பாரம்பரியம் உள்ளன.

ஆனால் விளையாட்டில் ஒரே ஒரு நிகழ்வு கைகுலுக்கல் மட்டும்தான்.

சாம்பியன் பட்டம் வெல்லும் நிகழ்வைவிட கைகுலுக்குதல் தான் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் கைகுலுக்குவது பாரம்பரி யம் அல்ல, நமஸ்தே (வணக்கம்) தான் பாரம்பரி யம் என சொல்வது விளையாட்டு உலகில் இந்தியர்களை தனிமைப்படுத்தும் என ரசிகர்கள், விளையாட்டு நிபுணர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஏன் கைகுலுக்குகிறீர்கள்? பத்திரிகையாளர் சுஷாந்த் சிங் மிதுன் மன்ஹாஸின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசுகையில்,”அப்படியென்றால், நீங்கள் (மன்ஹாஸ்) ஏன் மற்ற நாட்டு அணிகளுடனோ அல்லது ரஞ்சி கோப்பையிலோ அல்லது ஐபிஎல்-லிலோ கைகுலுக்குகிறீர்கள்? அமித் ஷாவின் ‘அறிவாளிப் பிள்ளை’ தேர்ந்தெடுத்த ஆட்களின் தரம் இதுதான்” என கண்டனம் தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.