தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

3 Jan 2026, 2:20 pm
விளையாட்டு

பாஜக மிரட்டல் எதிரொலி ஐபிஎல் தொடரில் முஸ்தபிஷூர் ரகுமானை நீக்க பிசிசிஐ அறிவுறுத்தல்

வங்கதேசத்தைச் சேர்ந்த  கிரிக்கெட் உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முஸ்தபிஷூர் ரகுமானை ஐபிஎல் 2026 தொடருக்கான மினி ஏலத்தில் ரூ.9.20 கோடிக்கு கொல் கத்தா அணி வாங்கியது. இந்நிலையில், வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையில் அந்நாட் டின் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல் நடத்தப்படும் சூழலில், ஐபிஎல் தொடரில் இருந்து முஸ்தபிஷூர் ரகுமானை நீக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரி யம் (பிசிசிஐ) அறிவுறுத்தி உள்ளது. பாஜக தலைவர்கள் (எம்எல்ஏ  நந்த் கிஷோர் உள்ளிட்டோர்), “வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப் படும் போது, அந்நாட்டைச் சேர்ந்த முஸ்தபிஷூர் ரகுமான் ஐபிஎல் தொ டரில் விளையாடலாமா? ஷாருக் கான் ஒரு ஜிஹாதியை ரூ.9.20 கோடிக்கு  வாங்கியுள்ளார். இந்தியாவில் வீரர் கள் இல்லையா?” என கேள்வி எழுப்பி னர். சில பாஜக தலைவர்கள் மிரட்டலும் விடுத்தனர். மேலும் பிரபல இந்தி திரைக்கலைஞரும், கொல்கத்தா அணி உரிமையாளருமான ஷாருக் கானுக்கு எதிராக பாஜக தலைவர் கள் வெறுப்புப் பேச்சை கக்கினர். இத்தகைய சூழலில், பிசிசிஐ செயலாளர் சைகியா,”சமீபத்திய சல சலப்புகள் காரணமாக, முஸ்த பிஷூர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்குமாறு கொல்கத்தா உரி மையாளரை (திரைக்கலைஞர் ஷாருக் கான்)  பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. மாற்று வீரர் கோரப்பட்டால் பிசிசிஐ அனுமதிக்கும்” என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஷாருக் கான் என்ன செய்வார்?

ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் 16, 2025 அன்று அபு தாபியில் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு பின்பு தான், வங்க தேசத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டு வருகிறது. ஏலம் நடந்த சமயத்தில் வன்முறை எதுவும் இல்லை. அதே போல ஏலம் நடந்த போது வங்கதேச வீரர்களை வாங்குவது தொடர்பாக எவ்வித விவாதம் நடை பெறவில்லை. பிசிசிஐ மற்றும் மோடி அரசு சார்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.  முஸ்தபிஷூர் ரகுமான் சிறந்த இடதுகை பந்து வீச்சாளர். அவரது திறமையை கணித்தே கொல்கத்தா  அணி உரிமையாளர் ஷாருக் கான் ரகுமானை ரூ. 9.2 கோடிக்கு வாங்கியுள்ளார். ஆனால் தற்போது ரகு மானை ஏலத்தில் எடுத்த ஷாருக் கானை தேச விரோதி என முத்திரை குத்துவது சரியானது அல்ல ; இந்த விவகாரத்தில் அவர் என்ன செய்வார்? என நெட்டிசன்கள் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி   இன்று தொடக்கம்

ஆஸ்திரேலியாவில் நடை பெற்று வரும் 2025-26 ஆம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடர், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி முதல் மூன்று போட்டிகளையும் வென்று 3-0 என்ற கணக்கில் கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது.  கடந்த வாரம் நடைபெற்ற 4ஆவது மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பாக்சிங் டே’ டெஸ்டில் இங்கிலாந்து திரீல்  வெற்றி யை ருசித்து, 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் புதிய தொடக் கத்தை ஆரம்பித்தது.  இந்நிலையில், ஆஷஸ் தொடரின் 5ஆவது மற்றும் கடைசிடெஸ்ட் போட்டி ஞாயிறன்று காலை சிட்னி மைதானத்தில் (காலை 5 மணிக்கு) தொடங்குகிறது. ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட படு தோல்விக்கு பதிலடி வெற்றியை கொடுக்கும் முனைப்பில் ஆஸ்திரேலியா அணியும், வெற்றியுடனும் சூப்பர் பார்முட னும் அடுத்த தொடருக்கு தயாராகும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.  உஸ்மான் கவாஜா குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் உஸ்மான் கவாஜா சிட்னி டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டி லிருந்து ஓய்வு பெற உள்ளார். இது அவ ருக்கு ஒரு உணர்ச்சிகரமான விடை பெறும் போட்டியாக இருக்கும் என்ற நிலை யில், அவருக்கு வெற்றியை அன்பளிப்பாக அளிக்க ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால் சிட்னி டெஸ்ட் போட்டியின் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்ய நிகழ்வுகளுடன் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.