தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

19 May 2026, 10:18 pm
விளையாட்டு

தமிழ்நாட்டிற்கு கவுரவம் சென்னையில் பிக் பாஷ் லீக் போட்டி

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற டி-20 கிரிக்கெட் தொடரான பிக் பாஷ் லீக் (BBL) போட்டியின் தொடக்க ஆட்டத்தை இந்தியாவில் நடத்த பிசிசிஐ அனுமதி அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி வரும் 2026-27ஆம் ஆண்டுக்கான பிக் பாஷ் லீக் (BBL 16) தொடரின் தொடக்க போட்டியை மட்டும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடத்துவதற்கு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஒப்புதல் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கூறுகையில், “இந்தியாவில் பிபிஎல் போட்டிகள் நடத்துவது தொடர்பாக இரு நாட்டு கிரிக்கெட் வாரியங் களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாகச் சென்று கொண்டிருக்கிறது. இது இந்தியா உடனான கிரிக்கெட் உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்தத் தொடக்க ஆட்டத்தை சென்னையில் நடத்த திட்ட மிட்டு வருகிறோம்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பிக் பாஷ் லீக் 16ஆவது சீசனின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்க ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. வெளிநாட்டு டி-20 லீக் தொடர் ஒன்றின் அதிகா ரப்பூர்வ போட்டி சென்னையில் நடத்தப்பட உள்ளதாக வெளியாகி யுள்ள நிலையில், இது இந்திய விளையாட்டு உலகில் மற்றும் தமிழ்நாட்டிற்கு பெரும் கவுரவமாக பார்க்கப்படு கிறது என ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சர்வதேச கால்பந்து அரங்கில் புதிய திருப்பம்! உலகக்கோப்பை மகுடத்திற்கு குவியும் ‘சூப்பர் ஸ்டார்’ பயிற்சியாளர்கள்

பொதுவாக, கிளப் கால் பந்து போட்டிகளில் கொட்டிக்கிடக்கும் பெரும் பணத் தோடு போட்டியிட முடியாமல் சர்வ தேச நாடுகள் சிறந்த பயிற்சியாளர் களை ஒப்பந்தம் செய்ய திணறுவது வழக்கம். ஆனால், 2026 உலகக் கோப்பை தொடர் இந்த வழக்கத்தை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது. உலகக்கோப்பையை வெல்லும் வரலாற்றுச் சிறப்புமிக்க இலக்கோடு, உலகின் 5 முன்னணி ‘சூப்பர் ஸ்டார்’ பயிற்சியாளர்கள் இந்த முறை கிளப் அணிகளை தவிர்த்து சர்வதேச அணி களின் பொறுப்பை ஏற்று களம் காண் கின்றனர். உலகக்கோப்பை மகுடத்திற் காக சர்வதேசப் போரில் இறங்கியுள்ள அந்த 5 முக்கிய பயிற்சியாளர்கள் பட்டியல்:

1. தாமஸ் துச்செல் (இங்கிலாந்து)

பேயர்ன் முனிச், செல்சி, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் போன்ற உலகின் முன்னணி கிளப்களை வழிந டத்திய தாமஸ் துச்செல், இப்போது இங்கிலாந்து அணியின் பயிற்சி யாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.

2. கார்லோ அன்செலோட்டி (பிரேசில்)

உலகக்கோப்பையின் சுற்றுகளில் ஐரோப்பிய அணிகளிடம் தொடர்ந்து தடுமாறி வரும் பிரேசில் அணி, தனது 6ஆவது உலகக் கோப்பை கனவை நனவாக்க ஐரோப்பாவின் மிகச் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவரான கார்லோ அன்செலோட்டியைத் தேர்வு செய்துள்ளது. சாம்பியன்ஸ் லீக் வர லாற்றிலேயே 5 முறை கோப்பையை வென்று மிகவும் வெற்றிகரமான பயிற்சி யாளராகத் திகழும் அன்செலோட்டி, நாக்-அவுட் போட்டிகளை கையாள்வ தில் வல்லவர்.

3. மொரிசியோ பச்செட்டினோ (அமெரிக்கா)

அமெரிக்க அணியின் பயிற்சியாள ராகப் பொறுப்பேற்றுள்ள அர்ஜெண்டி னாவின் பச்செட்டினோ, தற்போது கடுமையான சோதனைகளை எதிர் கொண்டு வருகிறார். இவரின் கீழ் அமெரிக்க அணி கான்டாகாப் நேஷன்ஸ் லீக் தொடர்களை வெல்லத் தவறியதோடு, பனாமா, மெக்சிகோ போன்ற அணிகளிடம் சொந்த மண்ணில் தோல்வியடைந்தது பெரும் விமர்சனத் திற்குள்ளானது. போர்ச்சுகல், பெல்ஜியம் அணிகளுக்கு எதிரான தோல்விகளுக்குப் பிறகு, உலகக் கோப்பையில் அமெரிக்க அணியை அவர் எவ்வாறு மீட்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

4. மார்செலோ பியெல்சா (உருகுவே)

நவீன கால்பந்தின் தலைசிறந்த பயிற்சியாளர்களான பெப் கார்டி யோலா, பொச்செட்டினோ ஆகியோ ருக்கே வழிகாட்டியாகத் திகழும் மார்செலோ பியெல்சா, தனது உலகக் கோப்பை பயணத்தில் இப்போது உருகுவே அணியை வழிநடத்துகிறார். தகுதிச் சுற்றில் பிரேசில், அர்ஜெண்டி னா அணிகளுக்கு எதிராகப் பெற்ற வரலாற்று வெற்றிகள் இவருக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தன.

5. ஜூலியன் நாகெல்ஸ்மேன் (ஜெர்மனி)

38 வயதே ஆன இளம் பயிற்சி யாளரான ஜூலியன் நாகெல்ஸ்மேன் கடந்த காலங்களில் உலகக்கோப்பை யில் லீக் சுற்றோடு வெளியேறி தடுமா றிய ஜெர்மனி அணிக்கு மீண்டும் ஒரு புதிய உத்வேகத்தைத் தந்துள்ளார். பிரேசில் அணிக்கு இணையாக 5ஆவது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்ற ஜெர்மனி துடிக்கும் வேளையில், நாகெல்ஸ்மேனின் சாது ரியமான உத்திகள் அந்த அணிக்குக் கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.