அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும்!
5 Apr 2026, 5:18 pm
<p><strong>அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும்!</strong></p>
<p>கோவை, ஏப்.5– பட்டாக்கள் மற்றும் சமு தாயக்கூடம் உள்ளிட்ட தேவை கள், ஆட்சி அமைந்தவுடன் குறுகிய காலத்திற்குள் அந்த பணிகள் நிறைவேற் றப்படும் என கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந் தில் பாலாஜி உறுதியளித் தார். கோவை காந்திபுரம் பகு தியிலுள்ள திமுக தெற்குத் தொகுதி தேர்தல் அலுவலகத்தில், மேற்கு மண்டல திமுக பொறுப்பாளரும் கோவை தெற்குத் தொகுதி வேட்பாளருமான செந்தில் பாலாஜி தலைமையில் அனைத்து கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடனான முக்கிய ஆலோ சனைக் கூட்டம் ஞாயிறன்று மாலை நடை பெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றிய வேட்பா ளர் செந்தில் பாலாஜி, வெற்றி என்பது நம் அனைவருக்கும் பொதுவானது என்பதால் கூட்டணிக் கட்சியினர் அனைவரும் மிகுந்த ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். தேர் தல் வரை குறைந்த நாட்களே எஞ்சி இருப்ப தால், அதிகப்படியான வாக்காளர்களைச் சென்றடையும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டும். வேட்பாளர்களுக்கி டையே வாக்கு சேகரிப்பில் போட்டியிருப்பது ஆரோக்கியமான முன்னேற்றத்தை கொடுக் கும். மக்களின் கோரிக்கைகளான புலிய குளம் பகுதியில் பட்டாக்கள் மற்றும் சமுதா யக்கூடம் உள்ளிட்ட தேவைகள் குறித்து தங்க ளுக்கு தெரியும். ஆட்சி அமைந்தவுடன் குறு கிய காலத்திற்குள் அந்த பணிகள் நிறை வேற்றப்படும், என்றார். இந்நிகழ்வில், திமுக கூட்டணியின் 10 சட்ட மன்றத் தொகுதி வேட்பாளர்கள், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். கிருஷ்ணமூர்த்தி, வி.இராமமூர்த்தி, சிபிஐ மாநிலப் பொருளாளர் ஆறுமுகம், மதுரை பாலா, மாமன்ற உறுப்பினர் சரவணகுமார், காங்கிரஸ் முன்னாள் மாநில பொதுச்செய லாளர் வீனஸ் மணி, சிபிஎம் நகரச் செயலாளர் சுபாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
